www.garudabazaar.com

"அவரோட Friend-ஆ பழகு".. மணிகண்டாவுக்கு குடும்பத்தினர் கொடுத்த அட்வைஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Manikanda Family Advices him to make peace with vikraman

Also Read | நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் G.P. முத்து?.. அவரே சொன்ன பதில்!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.

Manikanda Family Advices him to make peace with vikraman

மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ADKவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர்.

இந்நிலையில், கார்டன் பகுதியில் மைனாவுடன் பேசிக்கொண்டிருக்கிறார் மணிகண்டா. அப்போது, தனது குடும்பத்தினர் பேசியதை பற்றி அவர் மைனாவிடம் பகிர்ந்துகொள்கிறார். இதனிடையே பேசும் மைனா,"என்கிட்ட பேசும்போது நம்ம எல்லோரும் மீடியால இருக்கவங்க. இந்த நிகழ்ச்சி மூலமா, நம்ம எல்லோருக்கும் நல்ல ரீச் கிடைக்கும்னு சோஃபி சொன்னா" என்கிறார். அதைத் தொடர்ந்து பேசும் மணிகண்டா,"விக்ரமனுக்கும் உனக்கும் ஆரம்பித்துல இருந்தே ஆகல. அவரு உன்ன நாமினேட் பண்றாரு. நீ அவரை நாமினேட் பண்ற. போய் அவர்கூட friend ஆ பழகு-ன்னு என்கிட்ட சொன்னா" என்கிறார்.

Manikanda Family Advices him to make peace with vikraman

பின்னர் அருகில் இருந்த மைனா,"உன்கிட்ட முன்னாடியே சொன்னேன். அவருகிட்ட போய் பேசு. பேசுனா சரி ஆகிடும்னு" என்கிறார். மேலும், மணிகண்டா இதுபற்றி பேசுகையில் இதனால் வெளியே இருதரப்பு ரசிகர்களும் சண்டையிட்டுக்கொள்வதாக தனது மனைவி தன்னிடம் கூறியதாக கலகலப்பாக சொல்கிறார். இதனை கேட்டு புன்னகைத்தபடி மைனா அங்கிருந்து செல்ல மணிகண்டா பிக்பாஸ்-க்கு நன்றி தெரிவிக்கிறார்.

Also Read | "அந்த சமயத்தில் விஜய் மகிழ்ச்சியில் சிரிச்சுட்டார்".. வாரிசு இசை வெளியீட்டு விழா DJ EXCLUSIVE!

தொடர்புடைய இணைப்புகள்

Manikanda Family Advices him to make peace with vikraman

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Freeze Task, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Manikanda, Manikanda Family, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.