www.garudabazaar.com

ADK உடல்நிலைக்கு என்ன ஆச்சு..? பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாரா? - விபரம் | Bigg Boss 6 tamil

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 70 நாட்களை கடந்த நிலையில், இனிவரும் நாட்கள் ஒவ்வொன்றும் பிக்பாஸ் வீட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு மிக முக்கியமான ஒன்று என்பதால், அனைத்து போட்டியாளர்களும் தங்கள் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

What happened to ADK is he left from Bigg Boss 6 tamil

அதே போல, ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது. பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க், பள்ளி டாஸ்க், கதாபாத்திர கெட்டப் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.

அதே போல, சமீபத்தில் நடந்து முடிந்த ‘சொர்க்கம் – நரகம் – ஷார்ட்கட்’ டாஸ்க்கில் கூட நிறைய சண்டைகள் மற்றும் குழப்பங்கள் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் அரங்கேறி இருந்தது. முன்னதாக, பிக்பாஸ் இறுதி சுற்று வரை முன்னேறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஜனனி, கடந்த வார இறுதியில் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

இந்நிலையில் இந்த வார இறுதியில் கமல்ஹாசன் கலந்து கொண்டு போட்டியாளர்கள் மத்தியில் நடந்த டாஸ்க்குகள் குறித்து நிறைய விஷயங்களை பேசி இருந்ததாகவும் தெரிகிறது. அதிலும் குறிப்பாக, ரேங்கிங் டாஸ்க்கின் போது அசிம், விக்ரமன், ஷிவின், தனலட்சுமி உள்ளிட்ட போட்டியாளர்கள் மத்தியில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்தும் நிறைய கேள்விகளை கமல்ஹாசன் எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில், திடீரென பிக்பாஸ் வீட்டில் இருந்த ADK மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ADK உடல்நிலை குறித்த தகவல், அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

What happened to ADK is he left from Bigg Boss 6 tamil

People looking for online information on ADK Eliminated, ADK Health, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg boss ADK, Bigg boss ADK left, Kamal Haasan, What happened to ADK will find this news story useful.