அர்ஜுன் ரெட்டி ரீமேக் படத்தின் ரொமாண்டிக் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டில் நடிகர் ஷாகித் கபூர் நடித்துள்ள ‘கபீர் சிங்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மேரெ சோனியா’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

New romantic video song from Arjun Reddy Hindi remake Kabir Singh has been released

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக்காக ‘கபீர் சிங்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தை இயக்கிய சந்தீப் வாங்காவே இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இதில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார்.

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் இடம்பெற்ற காட்சிகளில் சில மாற்றங்கள் செய்து பாலிவுட் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் வரும் ரொமாண்டிக் பாடலான ‘மேரெ சோனியா’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

இப்படத்தின் டீசர், டிரைலர்கள், பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், ‘அர்ஜுன் ரெட்டி’ ரசிகர்களை மிகுந்த எதிர்ப்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. டி-சீரிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வரும் ஜூன் 21ம் தேதி ரிலீசாகவுள்ளது.

அர்ஜுன் ரெட்டி ரீமேக் படத்தின் ரொமாண்டிக் வீடியோ! வீடியோ