அப்போ ரஜினிக்கு எதிரி.. இப்போ ரஜினி இயக்குநர் வெளியிடும் ட்ரெய்லர் ! இயக்குநரான பிரபல நடிகர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் போஸ் வெங்கட்டின் ட்ரெய்லரை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

karthik subburaj releases bose venkat's kanni maadam trailer

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக கலக்கி வருபவர் போஸ் வெங்கட். சின்னத்திரையில் அறிமுகமான இவர், தனது நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு, ரஜினி நடித்த சிவாஜி படம் திருப்புமுனையாக அமைந்தது. இதை தொடர்ந்து கோ, சிங்கம், தீரன், கவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்தார்.

இந்நிலையில் போஸ் வெங்கட் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். கன்னிமாடம் எனும் திரைப்படத்தை அவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் காட்சியை, ரஜினியின் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். ட்ரெய்லரை பார்க்கும் போது, நடிப்பில் கலக்கி வந்த போஸ் வெங்கட், ஆழமான உணர்வகளை மையப்படுத்தி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் என தெரிகிறது.

அப்போ ரஜினிக்கு எதிரி.. இப்போ ரஜினி இயக்குநர் வெளியிடும் ட்ரெய்லர் ! இயக்குநரான பிரபல நடிகர். வீடியோ

Entertainment sub editor