சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' குறித்து பேட்ட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கமெண்ட் - ... உஷாரு !
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 09, 2020 12:04 PM
'பேட்ட' படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'தர்பார்'. இந்த படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சந்தோஷ் சிவன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து முதல் நாள், முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''தர்பார் மரண மாஸ், அய்யோ தலைவா... ஒவ்வொரு ஃபிரேமிலும் என்ன எனர்ஜி, கரிஷ்மா. நீங்க ஒரு மேஜிக் தலைவா. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சகோதரர் அனிருத்திற்கு வாழ்த்துகள். தலைவன் வேற ரகம் பார்த்து உஷாரு'' என்று குறிப்பிட்டுள்ளார்.