''பேட்ட' பேட்ட தான்'' - 'மாஸ்டர்' பட பிரபலம் கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 10, 2020 05:47 PM
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2019 பொங்கலை முன்னிட்டு மாபெரும் வெற்றி பெற்ற படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, சசிக்குமார், நவாஸுதின் சித்திக், சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, மாளவிகா மோகனன், இயக்குநர் மகேந்திரன், மேகா ஆகாஷ், முனீஷ் காந்த் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் இன்றுடன் வெளியாகி ஒரு வருடம் ஆன நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது மற்றும் எனது குழுவின் வாழ்க்கையை மாற்றிய மறக்க முடியாத அந்த ஒரு நாள். தலைவர் மற்றும் சன் பிக்சர்ஸ்க்கு நன்றி. பார்வையாளர்களுக்கும் தலைவர் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய நன்றி'' என்று குறிப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இயக்குநரும் ''மாஸ்டர்'' பட வசனகர்த்தாக்களில் ஒருவருமான ரத்ன குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், பேட்ட பேட்ட தான். நன்றி கார்த்திக் சுப்பராஜ் புரோ'' என்று குறிப்பிட்டுள்ளார்.
பேட்ட பேட்ட தான்🔥🔥. Thank you @karthiksubbaraj bro for this Vintage vista. #1yearofPetta . https://t.co/i7veymmU7r
— Rathna kumar (@MrRathna) January 10, 2020