கார்த்தின் சுப்புராஜ் – கீர்த்தி சுரேஷ் இணையும் படத்தை கைப்பற்றியது இவர்கள் தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் புதிய திரைப்பட த்துக்கு பெண்குயின் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

Penguin, Keerthy Suresh, Karthik Subbaraj satellite rights brought by Sun TV

‘மேயாத மான்’, ‘மெர்குரி’ ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 3வது திரைப்படத்தில் ‘தேசிய விருது’ வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இதன் சேட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கீர்த்தி சுரேஷ் இது தவிர மிஸ். இந்தியா, தலைவர் 168 மற்றும் மரக்கர் ஆகிய திரைப்படங்களில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor