“நரகாசுரன் வெளிவரும் ஆனால் ..” டைரக்டர் கார்த்திக் நரேன் சொல்லும் அப்டேட்டை கேளுங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் கார்த்திக் நரேன் தனது முதல் படமான ‘துருவங்கள் 16’ ரசிகர்களின் மனதை கவர்ந்து புகழ் பெற்றார். சமீபத்தில் அருண் விஜய் நடித்த ‘மாஃபியா: சேப்டர் 1’ படத்தை இயக்கியுள்ளார். இவரது இரண்டாவது படமான ‘நரகாசுரன்’ சில காரணங்களால் இன்னும் வெளியிடப்படவில்லை

Karthik Naren next movie D43 updates and Naragasuran updates

கிரிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ பட டிரெய்லரிலிருந்து ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்த கார்த்திக் நரேன்‘நரகாசூரன்’ வெளியீடு குறித்து ஒரு தகவலை வெளியிட்டார்.

டெனட் ட்ரெய்லரின் ஸ்கிரீன்ஷாட்டில் "நரகாசுரன்’ வெளிவரும் ஆனால்.....இந்தப் பகுதி சற்று நாடகத்தன்மையாக இருக்கும்" என்ற டயலாக்கை இணைத்திருந்தார். இந்தப்படத்தின் வெளியீடு குறித்த இந்தச் சிறிய செய்தி உண்மையில் கார்த்தி நரேன்  ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

அரவிந்த் சுவாமி, சுந்தீப் கிஷன், ஸ்ரியா சரண் மற்றும் ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ள ‘நரகாசுரன்’ படத்திற்கு நேரடியாக OTT வெளியீடு கிடைக்க வாய்ப்புள்ளது என்று கார்த்திக் நரேன் தனது பதிவில் மறைமுகமாக கூறியுள்ளார். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

கார்த்திக் நரேன் தற்போது தனுஷுடன் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார், இது தற்காலிகமாக ‘டி 43’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகிறது.  ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தைப் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் படக்குழுவினரால் வெளியிடப்படும்.

 

Karthik Naren next movie D43 updates and Naragasuran updates

People looking for online information on D43, Karthick Naren, Naragaasuran will find this news story useful.