அன்பை பொழிந்த சிறுவன்.. தேடி பிடித்த லாரன்ஸ்..! - ''இந்த பையனுக்கு ஸ்பெஷலா..''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். 

லாரன்ஸ் வெளியிட்ட கலங்க வைக்கும் பதிவு | actor raghava lawrence shares an emotional post of a boy's love

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாகவும் இயக்குநராகவும் இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடித்த காஞ்சனா சீரிஸ் திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஹிட் அடித்து வருகின்றன. இவர் தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சமூக நலத்திட்ட உதவிகள் செய்வதிலும் லாரன்ஸ் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். 

இந்நிலையில்  நடிகர் லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் லாரன்ஸ் அறக்கட்டளை சார்பில் உணவு பெற்ற சிறுவன், அவரது போஸ்டருக்கு அன்புடன் முத்தம் கொடுக்கும் போட்டோ வைரல் ஆனது. அதை பார்த்த லாரன்ஸ், ''இந்த போட்டோ, எனக்கு விருது கிடைத்த உணர்வை கொடுக்கிறது'' என பதிவிட்டார்.

இதையடுத்து தனது ரசிகர் மன்றம் மூலம் அந்த சிறுவனை கண்டுபிடித்திருக்கிறார் லாரன்ஸ். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், ''இந்த சிறுவனை பார்க்கும் போது சிறு வயதில் என்னை பார்த்தது போல இருக்கிறது. நானும் இதுபோல் தான் கஷ்டமான சூழலில் வளர்ந்தேன். இந்த சிறுவனை காண ஆவலாக உள்ளேன். இவனுக்கு ஏதாவது ஸ்பெஷலாக செய்ய வேண்டும்'' என பதிவிட்டுள்ளார். லாரன்ஸின் இந்த பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

லாரன்ஸ் வெளியிட்ட கலங்க வைக்கும் பதிவு | actor raghava lawrence shares an emotional post of a boy's love

People looking for online information on Raghava Lawrence will find this news story useful.