'மாநகரம்' படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் 'கைதி'. இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ் ஆர் பிரபு, எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் 'அஞ்சாதே' நரேன், யோகிபாபு, பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. டீஸரில் போலீஸ் அதிகாரியான நரேன், 'இன்னைக்கு ஒரு நாள் நாம ரோந்துக்கு போகலைனா, எத்தன கிரைம்ஸ் நடக்குதுனு நாளைக்கு பேப்பர் வாங்கி பாரு' என்கிறார். இதை வைத்து பார்க்கும் போது இந்த திரைப்படம் ஒரே இரவில் நடக்கும் கதையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
டீஸரின் இறுதி வரை, அந்த லாரியை ஓட்டிட்டு வந்தது யாரு என்று எல்லோரும் ஒருவரை தேடிக்கொண்டிருக்கிறார்கள். டீஸரின் இறுதியில் கார்த்தி அசால்ட்டாக உட்கார்ந்து சாப்பிடுகிறார். அனைவரும் தேடுவது கார்த்தியைத் தான் என்பதை உணர முடிகிறது. எதற்காக என்பது படம் வெளியானால் தான் தெரியும்.
‘அவன தட்டுனா தான் மத்தவங்கள தொட முடியும்’- கார்த்தியின் அதிரடி ஆக்ஷன் 'கைதி' டீஸர் வீடியோ