‘லேட்டா தான் வந்தது... அதனால தான்!' - மோடிக்கு நடிகை காஜல் பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல முன்னணி ஹீரோயினான காஜல் அகர்வாலுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Kajal Aggarwal couldn't attend swearing in ceremony of PM Narendra Modi

திரைத்துறையில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நடிகை காஜல் அகர்வால், தற்போது ஜெயம் ரவியின் 24வது படமான ‘கோமாளி’, ரமேஷ் அரவிந்த் இயக்கத்த்தில் உருவாகியுள்ள குயீன் பட தமிழ் ரீமேக்கான ‘பாரிஸ் பாரிஸ்’ ஆகிய படங்களின் வெளியீட்டிற்கு காத்திருக்கிறார். மேலும், ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி இன்று (மே.30) பதிவியேற்கிறார். தலைநகர் டெல்லியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை காஜல் அகர்வாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியின் அழைப்பிதழை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காஜல், தன்னால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாவில்லை என்பதை தெவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது ட்வீட்டில், ‘இந்த அழைப்புக்கு மிக்க நன்றி. இதனை பெறுவதில் மிகவும் மதிப்பிற்குரியவளாக உணர்கிறேன். இந்த வரலாற்று நிகழ்வை நேரில் காண ஆவலாக உள்ளது. ஆனால், தாமதமாக அழைப்பு வந்ததால், என்னால் உரிய நேரத்திற்கு டெல்லி வர இயலவில்லை. அது சற்று வருத்தமாக உள்ளது. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.