www.garudabazaar.com

கார்த்தி நடிக்கும் 'விருமன்'.. டிரெய்லர் ரிலீஸ் எப்போ? செம்ம போஸ்டருடன் வந்த தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Karthi Aditi Shankar Viruman Movie Trailer Update

Also Read | தாவணியில் 'விருமன்' பாட்டுக்கு செம்ம குத்து டான்ஸ் ஆடிய அதிதி ஷங்கர்.. தீயாய் பரவும் வீடியோ

கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி 'விருமன்’ திரைப்படத்தில் இணைந்தார்.

நடிகர் கார்த்தி  ‘பருத்திவீரன்’ திரைப்படத்திற்கு பிறகு கிராமத்து இளைஞனாக, நடித்த படம் ‘கொம்பன்’.   முத்தையா இயக்கத்தில், கிராமத்து பின்னணியில் உருவாகி வெற்றி பெற்றது.  இந்த வெற்றி கூட்டணி மீண்டும் விருமன் படம் மூலம் இணைந்தது.

முன்னதாக மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் இந்த படத்தின் படபிடிப்பு 60 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி படப்பிடிப்பு முடிவடைந்தது.

Karthi Aditi Shankar Viruman Movie Trailer Update

இப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை மாநகரில் நடத்த படக்குழு திட்டமிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி இந்த இசை வெளியீட்டு விழா நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அன்றே படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரத்யேக போஸ்டர் மூலம் படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Karthi Aditi Shankar Viruman Movie Trailer Update

இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார். ‘மாநகரம்’ மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கி முடித்துள்ளார்.

Karthi Aditi Shankar Viruman Movie Trailer Update

நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Also Read | கார்த்தி & அதிதியின் Chartbuster ‘கஞ்சா பூவு கண்ணால’… விருமன் சிங்கிள் படைத்த சாதனை

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Aditi Shankar Viruman Movie Trailer Update

People looking for online information on Aditi Shankar, Karthi, Karthi viruman movie, Viruman Movie, Viruman Movie Trailer Update will find this news story useful.