www.garudabazaar.com

சந்திரமுகி -2 ஷூட்டிங்கில் இணைந்த பிரபல நடிகை.. BTS Image உடன் வந்த சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சந்திரமுகி 2' படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.

Radhika joined in Chandramukhi 2 at Mysore

Also Read | Breaking : லாரன்ஸ் - வடிவேலு காம்போவில் 'சந்திரமுகி 2'.. ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் தகவல்

நடிகர் ராகவா லாரன்ஸ்  நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்  'சந்திரமுகி 2'  திரைப்படத்தை தயாரிக்கிறார். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார்.

இந்த படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குச்சுப்புடி நடன கலைஞரான லட்சுமி மேனன் சந்திரமுகி 2 படத்தில் நடிப்பதாக வரும் தகவல்கள்  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

Radhika joined in Chandramukhi 2 at Mysore

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். 'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

Radhika joined in Chandramukhi 2 at Mysore

ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது. தற்போது இந்த மைசூர் படப்பிடிப்பில் நடிகை ராதிகா இணைந்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் எடுத்த BTS புகைப்படம்  மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகர் வடிவேலு மைசூர் படப்பிடிப்பில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Also Read | சந்திரமுகி - 2 ஷூட்டிங்.. ரஜினி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய லாரன்ஸ்.. நெகிழ்ச்சி பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Radhika joined in Chandramukhi 2 at Mysore

People looking for online information on Chandramukhi 2, Raghava Lawrence will find this news story useful.