‘காதல், கிரிக்கெட், சண்டை..’ - விஜய் தேவரகொண்டாவின் Dear Comrade டிரைலர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 11, 2019 03:34 PM
‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் காம்ரேட்’ திரைப்படத்தின் தெலுங்கு டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மண்டனா இணைந்து நடித்துள்ள ‘டியர் காம்ரேட்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 தென்னிந்திய மொழிகளில் வெளியாகிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். யாஷ் ரங்கினேனி தயாரித்துள்ள இப்படத்தின் தெலுங்கு டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் அதிரடி மாணவனாகவும், கிரிக்கெட் வீரராகவும் இருக்கும் தேவரகொண்டாவின் வாழ்வில் காதல் மலர்ந்த பிறகு அவர் சந்திக்கும் சவல்களை மையமாக கொண்டு இப்படம் உருவாகியிருப்பதை கூறும் வகையில் டிரைலரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. காதல் வரும் போது இருக்கும் சந்தோஷம், அது நம்மைவிட்டு சென்ற பிறகு வலியாய் மாறுவதாக விஜய் தேவரகொண்டா வசனம் பேசி நடித்துள்ளார்.
‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்திற்கு பிறகு ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘காதல், கிரிக்கெட், சண்டை..’ - விஜய் தேவரகொண்டாவின் DEAR COMRADE டிரைலர் இதோ வீடியோ