நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் காம்ரேட்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் இன்று வெளியானது.

இயக்குநர் பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மண்டனா இணைந்து நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 தென்னிந்திய மொழிகளில் வெளியாகிறது.
யாஷ் ரங்கினேனி தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடிதடியுடன் ஆக்ஷன் காட்சிகள் கலந்த டீசரின் இறுதியில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகாவின் முத்தம் ஹைலைட்டாக இருந்தது.
இந்நிலையில், கடந்த ஏப்.5ம் தேதி ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘ஆகாச வீடு கட்டும்’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இடம்பிடித்தது. ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ள இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘Gira Gira Gira’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.
இந்த பாடலை பின்னணி பாடகர்கள் சித் ஸ்ரீராம், ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த பாடல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி சேர்ந்த நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘இன்கேம் இன்கேம்’ பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
டியர் காம்ரேட்- மூன்றாவது சிங்கிள் லிரிக் வீடியோ இதோ! வீடியோ