விஜய்யின் 'தளபதி 64' ஹீரோயின் இவரா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் 'தளபதி 63' படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Rashmika Mandanna not to act in Vijay's Thalapathy 64

இந்த படத்துக்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஃபுட் பால் விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தை அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறாராம்.  இந்த படத்தை சினேகா பிரிட்டோ தயாரிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்த ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த செய்தியில் உண்மை இல்லை என தெரியவந்துள்ளது.

இன்னும் இந்த படத்தின் ஹீரோயின் குறித்து உறுதி செய்யப்படவில்லை. தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அதன் பிறகே ஹீரோயின் யார் என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.

ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழில் கார்த்தியுடன் 'சுல்தான்' என்கிற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை ரெமோ இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார்.