www.garudabazaar.com

குழந்தையுடன் ‘தமிழன்’ பட நடிகை பிரியங்கா சோப்ரா.. 😍 வைரலாகும் புதிய ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பிரியங்கா சோப்ரா தனது  குழந்தையின் போட்டோவை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Priyanka Chopra Latest Instagram Story went viral

Also Read | வாரிசு படத்தின் முக்கிய 3 ஏரியா உரிமத்தை கைப்பற்றிய பிரபல வினியோகஸ்தர்..!!

2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் சினிமாவில் அறிமுகமான முதல் படமே தமிழில் தான். அதனைத் தொடர்ந்து இந்தி சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் ஹாலிவுட் வரை சென்று மிகப்பெரிய அளவில் புகழ் அடைந்தார்.குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் பிரியங்கா சோப்ரா, அதைத் தொடர்ந்து தன்னை விட  10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.

Priyanka Chopra Latest Instagram Story went viral

அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் நடத்தி ஆன்லைன் மூலம் டிரெணடிங்கில் இருந்து வரும் நடிகைகளில் பிரியங்கா சோப்ரா முக்கியமானவர். பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மட்டும் 83 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்தது.  இந்த வருட துவக்கத்தில் வாடகைத்தாய் மூலம் பிரியங்கா சோப்ராவுக்கு குழந்தையும் பிறந்தது.

இந்த குழந்தைக்கு மால்தி என பெயரிட்டனர். குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதாவது பிரியங்கா சோப்ரா பதிவிடுவார். ஒரிரு முறை குழந்தையின் புகைப்படத்தை மறைத்து வெளியிட்டுள்ளார்.

Priyanka Chopra Latest Instagram Story went viral

தற்போது அமெரிக்காவில் இருக்கும் பிரியங்கா சோப்ரா தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மகள் மால்தியின் கண்கள் மூடப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | நாக சைதன்யாவின் புதிய படத்தின் போஸ்டர் டிசைனர் இவரா? வைரலாகும் வெங்கட் பிரபு 'டச்'!

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka Chopra Latest Instagram Story went viral

People looking for online information on Priyanka Chopra, Priyanka Chopra Latest Instagram Story will find this news story useful.