www.garudabazaar.com

பிரபல OTT-யில் தனுஷ் நடித்த 'நானே வருவேன்'.. ரிலீஸ் எப்போ? முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடித்த 'நானே வருவேன்' திரைப்படம் பிரபல ஒடிடியில் வெளியாகி உள்ளது.

Dhanush Naane Varuven OTT Release on Amazon Prime Video

Also Read | Bigg boss 6 tamil : "நீயெல்லாம் பொண்ணா".. தனிப்பட்ட வஞ்சகமா..? ஷெரினா விஷயத்தில் தனலட்சுமியை சீறிய அசீம்.!

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி S தாணு வழங்கும் வீ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் "  நானே வருவேன்"  திரைப்படம் உலகமெங்கும் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி ( வியாழக்கிழமை ) வெளியானது.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை இந்துஜாவும் மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளனர்.

Dhanush Naane Varuven OTT Release on Amazon Prime Video

இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் 58 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்திற்கு புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும்,   ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Dhanush Naane Varuven OTT Release on Amazon Prime Video

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி சேனலான சன் டிவி கைப்பற்றி உள்ளது, டிஜிட்டல் ஒடிடி உரிமத்தை பிரபல அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Dhanush Naane Varuven OTT Release on Amazon Prime Video

இந்நிலையில் இந்த படம் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் இன்றுமுதல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. வாடிக்கையாளர்கள் இன்றுமுதல் இந்த படத்தை பிரைம் வீடியோ தளத்தில் கண்டு களிக்கலாம்.

Also Read Bigg boss 6 tamil : "பறக்க விட்ருப்பேன்.!".. "அச்சச்சோ.. பயந்துட்டேன்".. அனல்பறந்த ஷிவின் Vs மகேஸ்வரி வாதம் 😱

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Naane Varuven OTT Release on Amazon Prime Video

People looking for online information on Amazon Prime Video, Dhanush, Naane varuvean, Naane Varuven OTT Release updates will find this news story useful.