www.garudabazaar.com

தளபதி விஜய்க்கு பிடித்த உணவு சமைத்து.. போனில் பேசிய ஷோபா சந்திரசேகர்! நெகிழ்ச்சி வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய்.

Varisu Vijay mother shoba chandrasekhar phone conversation

Also Read | குழந்தையுடன் ‘தமிழன்’ பட நடிகை பிரியங்கா சோப்ரா.. 😍 வைரலாகும் புதிய ஃபோட்டோஸ்

இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.

நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

Varisu Vijay mother shoba chandrasekhar phone conversation

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Varisu Vijay mother shoba chandrasekhar phone conversation

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

இந்த வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Varisu Vijay mother shoba chandrasekhar phone conversation

இந்நிலையில் நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலின் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தனது தோழியுடன் சேர்ந்து நடிகர் விஜய்க்கு பிடித்த சர்க்கரை பொங்கல் சமைத்தார். நிகழ்ச்சியின் நடுவே நடிகர் விஜய்க்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். "ஹாய் அம்மா ஷூட்டிங்ல இருக்கேன் " என ஷோபாவிடம் விஜய் பதில் அளித்தார். படப்பிடிப்பு முடிந்து விஜய் வீடு திரும்பிய பின்னர் மீண்டும் சர்க்கரை பொங்கல் சமைத்து தருவதாக ஷோபா கூறினார். மேலும் ஜாக்கிரதையாக உடம்பை பாத்துக்கோ. சென்னை வந்ததும் மீட் பண்ணலாம் என்று ஷோபா கூறினார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read | வாரிசு படத்தின் முக்கிய 3 ஏரியா உரிமத்தை கைப்பற்றிய பிரபல வினியோகஸ்தர்..!!

தளபதி விஜய்க்கு பிடித்த உணவு சமைத்து.. போனில் பேசிய ஷோபா சந்திரசேகர்! நெகிழ்ச்சி வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Varisu Vijay mother shoba chandrasekhar phone conversation

People looking for online information on Shoba chandrasekhar phone conversation with thalapathy vijay, Varisu, Varisu Vijay, Vijay, Vijay mother shoba chandrasekhar will find this news story useful.