'இவ்வளவு தூரம் போகும்னு நான் Expect பண்ணவே இல்ல..' - நடிகை மகாலட்சுமி வருத்தம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 06, 2019 06:44 PM
பிரபல சீரியல் நடிகை ஜெயஸ்ரீ தனது கணவரும் சீரியல் நடிகருமான ஈஸ்வர் மீது தன்னை அடித்து துன்புறுத்துவதாக பரபரப்பு புகார் கூறியிருந்தார். இதனையடுத்து ஈஸ்வர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமினில் வெளியில் வந்த ஈஸ்வர், ஜெயஸ்ரீயின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை மஹாலட்சுமி Behindwoods Airக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது, ''என் கணவர் அனிலும், ஜெயஸ்ரீயும் சேர்ந்து எங்களை கார்னர் பன்றாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் ஏதோவொரு விஷயம் நடக்கணும். இதுக்கு நாங்க பலியாடு ஆகிட்டோம். அவங்க ஃபிரெண்ட்ஷிப்ல எங்கள பழிவாங்குறாங்க.
இந்த செய்தி எல்லா இடத்திலும் பரவிடுச்சு. நான் தான் காரணம் என்பது மாதிரி அவங்க புரொஜக்ட் பண்ணிருக்காங்க. இத என்னால டைஜஸ்ட் பண்ணவே முடியல. ஏன்னா இது இவ்வளவு தூரம் போகும்னு எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல. யாரு என் முகத்தை பார்த்தாலும் அப்படித்தானங்க நியாபகம் வரும்.
நானும் ஒரு பொண்ணுதானங்க. இந்த மாதிரி ஒரு விஷயம் ஒரு பொண்ணுக்கு வந்துச்சுனா எப்படி ஏத்துக்க முடியும். இத சும்மா விடமாட்டேன். இவங்களால என் மானமே போச்சு. கம்ப்ளைன்ட் பண்ணாம மட்டும் இருக்க மாட்டேன்'' என்று தெரிவித்திருந்தார்.
'இவ்வளவு தூரம் போகும்னு நான் EXPECT பண்ணவே இல்ல..' - நடிகை மகாலட்சுமி வருத்தம் வீடியோ