www.garudabazaar.com

தீபிகா படுகோனை வம்புக்கிழுத்த நடிகை கங்கனா ரனாவத்! புதிய படம் பற்றிய கருத்தால் சர்ச்சை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: நடிகை கங்கனா ரனாவத் தீபிகா படுகோன் நடித்த புதிய படத்தை விமர்சித்து சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

Kangana Ranaut Latest Statement about Deepika Padukone Movie

திடீர் டிரெண்டான நடிகை மீரா ஜாஸ்மின்... வைரலாகும் HOT போட்டோஷூட் VIDEO & புகைப்படங்கள்!

நடிகை கங்கனா ரனாவத், இந்தி பட உலகில் முன்னணி நடிகை, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்ததன் மூலம் பரவலான ரசிகர்களை கவர்ந்தவர். சிறந்த நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகளை வென்றதன் மூலம் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர்.

2008ம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்தாண்டு சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

அவ்வப்போது தனது மனதில் பட்ட கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையை கிளப்புவார். இந்நிலையில் தீபிகா படுகோன் நடித்து பிப்ரவரி 11 அன்று அமேசான் பிரைமில் ரிலீசான கெஹ்ரையன் படம் பற்றி சர்ச்சையான கருத்தை இன்ஸ்டாகிராமில் கங்கனா ரனாவத் பகிர்ந்துள்ளார்.

அதில், "இந்த மாதிரியான காதல் கதைகளை நான் அடையாளம் கண்டு புரிந்துகொள்கிறேன்... மில்லினியம்/புதிய யுகம்/நகர்ப்புற திரைப்படங்கள் என்ற பெயரில் குப்பைகளை விற்காதீர்கள் ப்ளீஸ்.. மோசமான திரைப்படங்கள் மோசமான திரைப்படங்கள் தான், எந்த ஸ்கின் ஷோ அல்லது ஆபாசமும் அதை காப்பாற்ற முடியாது. கோய் கெஹ்ரையன் வாலி பாத் நஹி ஹை என்பது ஒரு அடிப்படை உண்மை". என கூறியுள்ளார்.

கரண் ஜோகரின் தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் Viacom18 ஸ்டுடியோஸ் இணைந்து ஷகுன் பத்ராவின் ஜௌஸ்கா ஃபிலிம்ஸுடன் இணைந்து தயாரித்துள்ள இந்த கெஹ்ரையன் படம் பிப்ரவரி 11 அன்று ரிலீஸ் ஆனது. கபூர் & சன்ஸ் படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் ஷகுன் பத்ரா இந்த படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படம் திரையரங்கு வெளியீட்டைத் தவிர்த்துவிட்டு OTT வழியைத் தேர்வுசெய்து, நேராக Amazon Prime -ல் ரிலீசானது.  இந்த படத்துக்கு சென்சார் போர்டால் A சான்றிதழ் கொடுக்கப்பட்டது.  25 ஜனவரி 2022 முதல் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. பின் படத்தின் ரிலீஸ் பிப்ரவரிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த படத்தில் தீபிகா படுகோன், அனன்யா பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி, தைரியா கர்வா, நசீருதீன் ஷா மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த பட டீசரில் தீபீகா படுகோன் 9 வருடங்களுகு பிறகு பிகினியில் தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே போல் டிரெய்லரில் பல முத்தக்காட்சிகளும், குளியலறை, படுக்கை காட்சிகளும் இடம் பெற்றிருந்து பரபரப்பை கிளப்பியது. நவீன உறவுச்சிக்கலை இந்த படம் பேசி உள்ளதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விக்ரமின் கோப்ரா படத்திற்கான 4 வருட உழைப்பு! BTS Image வெளியிட்டு படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Kangana Ranaut Latest Statement about Deepika Padukone Movie

People looking for online information on கங்கனா ரனாவத், கெஹ்ரையன் படம், தாம் தூம், தீபிகா படுகோன், Deepika Padukone, Deepika Padukone Movie, Gehraiyaan, Kangana Ranaut, Siddhant Chaturvedi will find this news story useful.