www.garudabazaar.com

வெளிநாட்டு பிரதமரை வம்புக்கிழுத்த நடிகை கங்கனா ரனாவத்! பரபர கருத்தால் சர்ச்சை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: நடிகை கங்கனா ரனாவத் வெளிநாட்டு பிரதமரை வம்புக்கிழுத்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

Kangana Ranaut Controversial Statement about Canada PM

விஜய் பட நடிகைக்கு செம்ம யோகம்.. அக்கட தேசத்திலும் அடித்த ஜாக்பாட்

நடிகை கங்கனா ரனாவத், இந்தி பட உலகில் முன்னணி நடிகை, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்ததன் மூலம் பரவலான ரசிகர்களை கவர்ந்தவர். சிறந்த நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகளை வென்றதன் மூலம் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர். 2008ம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்தாண்டு சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

கடந்தாண்டு நவம்பர் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை கங்கனா சர்ச்சையில் சிக்கினார். இதற்கு முன் வேளான் சட்டங்களுக்கு முழு ஆதரவையும் கங்கனா ரனாவத் வழங்கினார். இது குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்தார்.  அதில் உச்சமாக தனது இன்ஸ்டாகிராமில் 'இந்திராகாந்தி மட்டுமே காலிஸ்தான் பஞ்சாப் தீவிரவாதிகளை தன் கால் ஷூவால் நசுக்கினார். தன் உயிரைப் பணயம் வைத்து கொசுக்களை நசுக்குவது போல் காலிஸ் தான் தீவிரவாதிகளை காலால் நசுக்கினார். இன்றும் அவர் பெயரைக்கேட்டாலே நடுங்குகிறார்கள். அவரைப் போன்ற ஒருவர் தான் அவர்களுக்கு தேவை' என்று பதிவிட்டிருந்தார்.

Kangana Ranaut Controversial Statement about Canada PM

 

Kangana Ranaut Controversial Statement about Canada PM

 

இதனால் டெல்லியில் போராடிய விவசாயிகள் கங்கனாவுக்கு எதிராக குரல்களை எழுப்பினர். பஞ்சாப் முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பின. கங்கனாவை சிறையில் அடைக்க வேண்டும் அல்லது மன நல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். விவசாயிகளை அவர் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கூறியது, விவசாயிகளை அவமதிப்பது போல் இருக்கிறது.  அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பல எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. மேலும் கங்கனாவுக்கு எதிராக டெல்லி போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது.

இச்சூழலில் கொரோனா நெறிமுறைகளை எதிர்த்து கனடா நாட்டில் ஒட்டாவா நகரில் அரசு எதிர்ப்பாளர்கள், எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சுய பாதுகாப்பு காரணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் அரசின் ரகசிய இடத்தில் குடியேறி விட்டதாக செய்திகள் வெளியானது.

Kangana Ranaut Controversial Statement about Canada PM

 

Kangana Ranaut Controversial Statement about Canada PM

இது தொடர்பான செய்தியை, இந்தி நடிகை கங்கனா ரனாவத்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "ஜன்டின் ட்ரூடோ இந்திய போராட்டக்காரர்களை தட்டிக்கொடுத்தார். இப்போது அவருக்கு எதிராக சொந்த நாட்டில் போராட்டக்காரர்கள் போராடுவதால் ரகசிய இடத்தில் பதுங்கி உள்ளார். இது தான் கர்மா, கர்மா அவரை திருப்பித் தாக்குகிறது” என பதிவிட்டுள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வலிமை முதல் BEAST வரை.. தற்செயலா? திட்டமிடலா? 'செம்ம PLAN' ரசிகர்களுக்கும் தியேட்டர்களுக்கும் HAPPY!

Kangana Ranaut Controversial Statement about Canada PM

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kangana Ranaut Controversial Statement about Canada PM

People looking for online information on தலைவி, நடிகை கங்கனா ரனாவத், Canada PM, Controversial, Kangana Ranaut will find this news story useful.