www.garudabazaar.com

'கமல்' - லோகேஷின் 'விக்ரம்' படத்தில் இணையும் பிரபல நடிகர்!! செம்ம அப்டேட்! ஷூட் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

1986 ஆம் ஆண்டு, நடிகர் கமல்ஹாசன் நடித்து, வணிக ரீதியாக பெருமளவில் ஹிட் அடித்த வெற்றி திரைப்படம் 'விக்ரம்'.

Narain roped in kamalhaasan's vikram direction lokesh kanagaraj

கமல்ஹாசன், சத்யராஜ், அம்ஜத்கான், அம்பிகா, டிம்பிள் கபாடியா, லிசி, சாருஹாசன் உள்ளிட்டோர் நடித்து வெளியான இந்த படம், அப்போதைய சூழலில் செம்ம கமர்ஷியல் படமாக பெரும் வரவேற்பை பெற்றதுடன், இந்த படத் தலைப்பும் ஹிட் ஆனது.

இந்த நிலையில் அண்மையில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து 'மாஸ்டர்' திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், 'மாஸ்டர்' படத்தின் பெரு வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை இயக்கவிருக்கும் தகவல் வெளியானது.

கமலின் 232-வது திரைப்படமான இந்த படத்தை, ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்க, அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். முன்னதாக இந்த படத்தின் ஸ்கிரிப்ட்க்கான பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வந்த நிலையில், இப்படத்தின் டீசர் யூடியூபில் 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில் தான், இந்த திரைப்படம் பற்றிய புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன. அதன்படி, 'அஞ்சாதே' உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ்த் திரைத்துறையில் அறியப்பட்ட நடிகர் நரேன், இந்த படத்தில் இணையவுள்ளதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 2021-ல் தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ALSO READ: அஷோக் செல்வனின் "புதிய படத்தில்".. 3 பிரபல தென்னிந்திய ஹீரோயின்கள்.. யார் யார்னு தெரியுமா?

தொடர்புடைய இணைப்புகள்

Narain roped in kamalhaasan's vikram direction lokesh kanagaraj

People looking for online information on Kamal Haasan, Lokesh Kanagaraj, Narain will find this news story useful.