www.garudabazaar.com

Breaking: விஜய் சேதுபதி - கமல் - ஃபகத் ஃபாசில்.. வேற மாரி வெளியான #VikramFirstLook !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநகரம், கைதி திரைப்படங்களைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு ரசிகர்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.

Kamalhaasan lokesh kanagaraj VikramFirstlook is Out Trending

இதனைத் தொடர்ந்து  தளபதி விஜய் நடிப்பில், அனிருத் இசையில் மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், மாஸ்டர் மகேந்திரன், அர்ஜூன் தாஸ், சாந்தனு, கௌரி கிஷன், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்த இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து  உலகநாயகன் கமல்ஹாசனை ‘விக்ரம்’ திரைப்படம் மூலம் இயக்கி வருகிறார்.

அவ்வகையில், 2021 ஜூலை 10 , சனிக்கிழமை, மாலை 5 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், முன்னதாக தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், தற்போது விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், இருவருக்கும் நடுவில் கமல்ஹாசன் என மூவரின் முகங்களும் அடங்கிய க்ளாசிக் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Kamalhaasan lokesh kanagaraj VikramFirstlook is Out Trending

இந்த போஸ்டருடன், "யுத்தத்தால் அதோ அதோ விடியுது..சத்தத்தால் அராஜகம் அழியுது.. ரத்தத்தால் அதோ தலை உருளுது.. சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது.. துடிக்குது புஜம்.. ஜெயிப்பது நிஜம்" என்கிற கமலின் பழைய ‘விக்ரம்’ படத்தின் ‘விக்ரம் விக்ரம்’ என்கிற பாடல் வரிகளையும் இயக்குநர் பகிர்ந்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kamalhaasan lokesh kanagaraj VikramFirstlook is Out Trending

People looking for online information on Anirudh Ravichander, Kamal Haasan, Lokesh Kanagaraj, VikramFirstLook rending will find this news story useful.