www.garudabazaar.com

குறும்படம் போடவா.? "தனலட்சுமியிடமே கேட்ட கமல்".! பரபரப்பு ப்ரோமோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் ஒன்றின் காரணமாக ஏராளமான பிரச்சனைகள் உருவாகி இருந்தது.

kamalhaasan asking about playing kurumpadam to housemates

இதனால் கடந்த சில தினங்களாகவே ரணகளமாக தான் பிக்பாஸ் வீடும் இயங்கி வருகிறது. அப்படி ஒரு சூழலில் தற்போது பிக்பாஸ் வீடு வழக்கம் போல சற்று கலகலப்பாகவும் இருந்து வருகிறது.

முன்னதாக, ஷெரினாவுக்கு காயம் ஏற்பட்ட பின்னர் அடுத்தடுத்து ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டே தான் இருந்தனர். ஆரம்பத்தில் மணிகண்டன் கோபம் அடைய, இதன் பின்னர் டாஸ்க்கில் ஏற்பட்ட மோதலால் அசீம், தனலட்சுமி, அமுதவாணன், விக்ரமன் உள்ளிட்ட பல போட்டியாளர்களிடையே மாறி மாறி விவாதங்கள் தான் நடந்து வந்தது. இதனால் வார இறுதியில் கமல்ஹாசன் வரும் போது உண்மை என்ன என்பது தெரிய வரும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதற்கு மத்தியில், Luxury Budget டாஸ்க்கும் நடைபெற்று வந்தது. இதிலும், மணிகண்டன், ஜனனி, ரச்சிதா, நிவா, தனலட்சுமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர். தற்போது பொம்மை டாஸ்க்கும் முடிவுக்கு வந்ததாக தெரியும் நிலையில், ஷிவின் மற்றும் அசீம் ஆகியோரை 'Worst Performer' மற்றும் சிறப்பாக பங்கெடுக்காத நபர் என்றும் கூறி சிறை செல்லும் படி பிக்பாஸ் தெரிவிக்கிறார். அவர்களும் சிறைக்கு சென்றிருந்தனர்.

இதனிடையே, புத்தம் புது லுக்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன் குறும்படம் போடுவது பற்றி கேட்கும் ப்ரோமோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

முதல் ப்ரோமோவில், "என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். எனக்கு தெரியும். ஆனா உள்ள இருக்குறவங்களுக்கு தெரிய மாட்டேங்குதே. பழி போடுறது ஈஸி. பழியை சுமக்குறது கஷ்டம். அத அவங்களுக்கு புரிய வைக்கணும். சில பேர காப்பாத்தி ஆகணும். சில பேரை யாராலும் காப்பாத்த முடியாது" என கமல் தெரிவிக்கிறார்.

இதன் பின்னர் வெளியான ப்ரோமாவில், ஷெரினாவை யார் தள்ளி விட்டார்கள் என்பது பற்றி அசீம், அசல் கோலார் உள்ளிட்டோரிடம் கமல் கேட்பது தெரிகிறது. இதன் பின்னர், தனலட்சுமியிடம் பேசும் கமல், "தப்பே பண்ணலன்னு நீங்க அவ்ளோ உறுதியா இருக்கீங்களா?" என கமல் கேட்டதும் "ஆமா சார்" என தனலட்சுமி கூறுகிறார்.

"உங்க மேல குற்றம் சுமத்துவது யாரு யாரு எல்லாம்?" என கமல் கேட்க, "மகேஸ்வரி, ADK, அசீம் அண்ணா" என தனலட்சுமி சொல்லும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. பின்னர், தப்பு செய்தால் அனைவரின் காலில் விழுந்து வெளியேறுவேன் என சொன்னதை பற்றியும் கமல் தனலட்சுமியிடம் கேட்டிருந்தார். இறுதியில் "குறும்படம் போடவா?" என கமல் கேட்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இதனால், குறும்படத்திற்கு பிறகு பொம்மை டாஸ்க் தொடர்பாக நிறைய உண்மைகள் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

kamalhaasan asking about playing kurumpadam to housemates

People looking for online information on BB6 Tamil, BiggBoss6 Tamil, Kamal Haasan will find this news story useful.