www.garudabazaar.com

BB6 Tamil : "MLA ஆகணுமா, சூப்பர்ஸ்டார் ஆகணுமா?".. ஜிபி முத்து சொன்ன மனம் கவரும் பதில்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அசீம் கேட்ட கேள்விக்கு ஜிபி முத்து சொன்ன பதில், கேட்பவர்களின் மனதை நெகிழ வைக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது.

gp muthu good hearted answer to azeem in biggboss6 tamil

பிக்பாஸ் 6 ஆவது சீசன் ஆரம்பமான முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சியில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் பார்வையாளர்கள் கவனத்தை அதிகம் பெற்று வருகிறது.

இதற்கு காரணம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருவதால் தான். இதனால், அடிக்கடி பிக்பாஸ் குறித்து பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் வலம் வருவதை நாம் பார்க்க முடியும்.

அதே போல, ஆரம்பத்தில் கலகலப்பான ரூட் எடுத்த பிக்பாஸ், அடுத்தடுத்து டாஸ்க்குகள் மற்றும் போட்டிகள் மூலம் தற்போது டாப் கியரிலும் சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே, புதிய போட்டியாளராக முதல் வார இறுதியில் மைனா நந்தினி கலந்து கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டின் புதிய கேப்டனாகவும் ஜிபி முத்து செயல்பட்டு வருகிறார்.

gp muthu good hearted answer to azeem in biggboss6 tamil

பிக்பாஸ் வீட்டிற்குள் எப்போதும் பரபரவென ஜிபி முத்து இயங்கிக் கொண்டே வருவதுடன் மட்டுமில்லாமல் தொடர்ந்து தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் கலகலப்பாக ஜிபி முத்து வைத்துக் கொள்கிறார். இதனிடையே, தனக்கு வேண்டிய வரம் பற்றி அசீம் கேட்க, இதற்கு ஜிபி முத்து சொன்ன பதில், பலரது இதயத்தையும் வென்று வருகிறது.

ஜிபி முத்துவிடம் பேசும் அசீம், "உங்களுக்கு என்ன வரம் வேண்டும். என்ன வேண்டுமானாலும் நீங்கள் கேட்கலாம். நீங்கள் ஒரு எம்எல்எ ஆகவோ, எம்பி ஆகவோ சூப்பர்ஸ்டார் வரை கூட ஆகலாம். எது வேண்டுமென நீங்கள் கேட்பீர்கள்?" என்றார்.

gp muthu good hearted answer to azeem in biggboss6 tamil

இதற்கு பதில் சொல்லும் ஜிபி முத்து, "என்னால் முடிந்த அளவுக்கு ஒரு ஆசிரமம் வைக்கணும், நல்ல காரியம் செய்யணும். இங்கே 60 கேமரா இருக்கிறது என்பதை நான் நினைக்கவே மாட்டேன். என்னை தனியாக கூட்டிகிட்டு கொண்டு போய் கேட்டாலும் இதைத் தான் நான் சொல்வேன்" என்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாலியாக ஜிபி முத்து வலம் வரும் அதே வேளையில், அவரது பரந்த எண்ணம் குறித்த விஷயமும், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

gp muthu good hearted answer to azeem in biggboss6 tamil

People looking for online information on Azeem, BB6 Tamil, BiggBoss6 Tamil, GP MUTHU will find this news story useful.