www.garudabazaar.com

Biggboss 6 Tamil : "மைனா நந்தினி கணவர் மேல Crush".. Open-ஆ சொன்ன போட்டியாளர்.. மைனா Reaction இதுதான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள மைனா நந்தினியின் கணவர் தனது 'Crush' என போட்டியாளர் கூறியுள்ளது தொடர்பான வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

shivin about myna nandhini husband in biggboss6 tamil

Also Read | Neeya Naana : வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பாத்தே கண்ணீர் விட்ட அண்ணன்.. உண்மை தெரிஞ்சு கலங்கிய சகோதரி!!

கடந்த ஒரு வாரம் முன்பு தமிழில் ஆரம்பமான பிக்பாஸ் 6 வது சீசன், அடுத்தடுத்து பல சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களால் சென்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ட்விஸ்ட், பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டே இருப்பதால், போட்டியாளர்களும் இதனை விறுவிறுப்புடன் கண்டு களித்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

shivin about myna nandhini husband in biggboss6 tamil

இதன் காரணமாக, பிக்பாஸ் குறித்த கருத்துக்கள் கூட எப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. இதனிடையே, முதல் வார இறுதியில் கமல்ஹாசன் தோன்றி போட்டியாளர்கள் மத்தியில் உரையாடி இருந்தார். இதில், பல சுவாரஸ்ய சம்பவங்களும் அரங்கேறி இருந்தது.

shivin about myna nandhini husband in biggboss6 tamil

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் 20 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், தற்போது புதிய போட்டியாளராக சின்னத்திரை பிரபலமான மைனா நந்தினி நுழைந்துள்ளார். சர்ப்ரைஸாக அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய அனைவரும் அவரை அசத்தலாக வரவேற்கவும் செய்திருந்தனர். இதனையடுத்து, மற்ற போட்டியார்களிடம் சகஜமாக நந்தினி பேசிக் கொண்டிருக்க, அவரிடம் பேசுகிறார் ஷிவின்.

shivin about myna nandhini husband in biggboss6 tamil

அப்போது, மைனாவின் கணவரான யோகேஷை தனக்கு மிகவும் பிடிக்கும் என ஷிவின் குறிப்பிடுகிறார். இதனை ஜாலியாக எடுத்துக் கொண்ட மைனா, இரண்டு வாரம் கழித்து உங்களிடம் ஒரு விஷயம் சொல்லலாம் என நினைத்திருந்தேன் என்றும், ஆனால் நீங்கள் சொல்லி விட்டதால் நானும் சொல்கிறேன் என குறிப்பிட்ட அவர், எனது கணவருக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் என ஷிவினிடம் தெரிவிக்கிறார்.

shivin about myna nandhini husband in biggboss6 tamil

மைனாவின் கணவரான யோகேஷ் சின்னத்திரையில் அதிகம் பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. வந்த முதல் நாளிலேயே கலகலப்பாக போட்டியாளர்களிடம் பழகும் மைனா நந்தினியின் வீடியோக்கள், அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | Biggboss6 Tamil : "மகேஸ்வரிய பாத்து பயமா??".. அசர வெச்ச ஜிபி முத்து பதில்!!

BIGGBOSS 6 TAMIL : "மைனா நந்தினி கணவர் மேல CRUSH".. OPEN-ஆ சொன்ன போட்டியாளர்.. மைனா REACTION இதுதான் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

shivin about myna nandhini husband in biggboss6 tamil

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Myna Nandhini, Shivin, Shivin about myna nandhini husband will find this news story useful.