www.garudabazaar.com

Biggboss6 Tamil: "4 கிலோ மைசூர்பாக் வாங்கி அனுப்பிவிடுங்க உள்ள.. இல்லைனா".. GP முத்து கலகல கோரிக்கை..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு வழங்க, பிக்பாஸிடம் மைசூர்பாக் வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார் GP முத்து.

Biggboss6 Tamil GP Muthu Asking Mysore Pak to give contestants

Also Read | ஒளிப்பதிவாளர் வீட்டு விசேஷத்தில் லோகேஷ் கனகராஜ் & அதிதி ஷங்கர்‌.! வைரல் போட்டோஸ்

சில தினங்களுக்கு முன்னர் துவங்கிய பிக் பாஸ் ஆறாம் சீசன் களைகட்ட துவங்கியிருக்கிறது. இந்த சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியாளர்களுக்கிடையே நடைபெறும் கலகல பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் என பிக்பாஸ் வீடு சுவாரஸ்யம் நிரம்பியதாக மாறியுள்ளது.

Biggboss6 Tamil GP Muthu Asking Mysore Pak to give contestants

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டின் கேப்டனை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைபெற்றிருக்கிறது. இதில் சாந்தி, ஜி.பி. முத்து மற்றும் ஜனனி ஆகியோர் போட்டிபோட்டனர். கைப்பிடிகள் கொண்ட கடிகாரம் போன்ற வீலில் அதிக நேரம் இருப்பவர் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இதில் முதலில் சாந்தி அவுட் ஆக, நெடுநேரம் போராடி ஜனனியும் வெற்றியை தவறவிட்டார். இறுதி வரையில் டாஸ்க்கில் தாக்குபிடித்த GP முத்து கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

Biggboss6 Tamil GP Muthu Asking Mysore Pak to give contestants

இதனால் போட்டியாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், வழக்கமான பாணியில் அவருடன் விளையாடியும் வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸிடம் GP முத்து கோரிக்கை ஒன்றையும் வைத்திருக்கிறார். அதில், போட்டியாளர்கள் அனைவரும் மைசூர் பாக் கேட்பதாகவும் ஆகவே, 4 கிலோ மைசூர் பாக் வாங்கி அனுப்பும்படியும் சொல்கிறார் அவர். இல்லையென்றால் அவரது நண்பர் ஆனந்திடம் சொன்னால் மைசூர் பாக்-ஐ வாங்கி அனுப்பிவிடுவார் எனவும் அதை பெற்று தரும்படியும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

கேமரா முன்னிலையில், ஆர்வமாக முத்து பேசிக்கொண்டிருக்க அமுதவாணன் அவரை வழக்கம்போல கிண்டலாக இடையூறு செய்கிறார். அவருக்கு தன்னுடைய பாணியில் ரிப்ளையும் கொடுக்கிறார் GP முத்து.

Also Read | மன்சூர் அலிகானின் மாஸ் டான்ஸ்.. வெளியான 'பகாசூரன்' படத்தின் 2-வது சிங்கிள் 'காத்தம்மா' பாடல்!

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss6 Tamil GP Muthu Asking Mysore Pak to give contestants

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, GP MUTHU, Mysore Pak, Vijay tv will find this news story useful.