"BB6 Tamil : தலைவருக்கு வெக்கத்த பாரு".. மனைவி பத்தி பேசுறப்போ 'Feel' பண்ணிய ஜிபி முத்து!!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் வீட்டிற்குள் தனது குடும்பம் பற்றி ஜிபி முத்து பேசிய விஷயங்கள், பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.
சமீபத்தில் தமிழில் பிக்பாஸ் 6 ஆவது சீசன் ஆரம்பமாகி இருந்தது. இதன் தொடக்கத்தில் போட்டியாளர்கள் ஜாலியாக நிகழ்ச்சியில் பங்கெடுக்கவே, அடுத்தடுத்த நாட்களில் டாஸ்க்குகள் மூலம் பிக்பாஸ் வீடு சூடு பிடிக்க தொடங்கி விட்டது.
இதன் காரணமாக, யாரும் எதிர்பாராத வகையிலான சம்பவங்களும் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. இதனால், பார்வையாளர்களும் இந்த நிகழ்ச்சியை விறுவிறுப்புடன் கண்டு களித்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இதன் காரணமாக, பிக்பாஸ் குறித்த கருத்துக்கள் கூட எப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரத்திற்கு பின்னர், புதிய போட்டியாளராக மைனா நந்தினி களமிறங்கி உள்ளார். பிக்பாஸ் வீட்டில் ஒரு பக்கம் பல விஷயங்கள் நடந்து கொண்டே இருந்தாலும், ஜிபி முத்து தினந்தோறும் செய்யும் விஷயங்களும் ட்ரெண்ட் ஆக தவறுவதில்லை.
இதற்கு மத்தியில், பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக ஜிபி முத்து தேர்வாகி செயல்பட்டு வருவதால் முழுக்க முழுக்க அவரை சுற்றி கலகலப்பாக தான் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், தற்போது மனைவி குறித்து போட்டியாளர்கள் மத்தியில் ஜிபி முத்து பேசும் விஷயங்கள், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மைனா நந்தினி, அசீம், தனலட்சுமி உள்ளிட்டோர் அமர்ந்திருக்க, அவர்கள் மத்தியில் பேசும் ஜிபி முத்து, "எங்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது" என்றார். தொடர்ந்து, அக்காவுக்கு லவ் யூ சொல்லி இருக்கிறீர்களா என மைனா கேட்க, "முன்னாடி எல்லாம் ஐ லவ் யூ என நான் சொன்னதே இல்லை. இப்போது நேர்காணல் செய்ய யாராவது வரும் போது, 'என் தங்கம் ஐ லவ் யூ' என மனைவியை பார்த்து சொல்வேன். ஆனால், அவள் என்னிடம் சொன்னதே இல்லை. வெட்கப்படுவாள். மாமா என கூட என்னை அழைத்ததில்லை" என ஜிபி முத்து கூறுகிறார்.
இதன் பின்னர், அவர் அப்படி ஐ லவ் யூ மாமா என சொன்னால் உங்களுக்கு ஓகேவா என மைனா மறுபடியும் கேட்க, "அப்படி அவள் சொன்னதே கிடையாது. ஒரு வேளை சொன்னால், ஐயோ எனது பொண்டாட்டி ஐ லவ் யூ என சொல்லி விட்டார் என்று இந்த வீட்டை பத்து தடவை சுத்துவேன்" என வெட்கத்துடன் ஜிபி முத்து சொல்கிறார்.
காமெடி, கலகலப்பு என்பதை தாண்டி மனைவிக்காக ஜிபி முத்து ஃபீல் செய்யும் விஷயங்களும் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Azeem And Ayesha Argued For Vessel Cleaning In Biggboss 6 Tamil
- Gp Muthu Warning To Biggboss In New Episode Biggboss6 Tamil
- Biggboss6 Tamil GP Muthu Asking Mysore Pak To Give Contestants
- BiggBoss Season 6 Tamil Captain Gp Muthu Funny Times
- Gp Muthu About Maheswari In Bigg Boss 6 Tamil
- First Captain Task In Biggboss 6 Tamil Gp Muthu And Janani
- First Nomination In Biggboss 6 Tamil New Promo Released
- Biggboss 6 Tamil First Nomination Week New Promo
- I Like GP Muthu For This Reason Says Kamal Bigg Boss 6 Tamil
- Janany And Rachitha Can My Heroines From Bigg Boss House GP Muthu
- Gp Muthu Wants To Act With Nayanthara Simran Bigg Boss 6 Tamil
- Bigg Box In Bigg Boss Gp Muthu Kamalhassan Bigg Boss 6 Tamil
தொடர்புடைய இணைப்புகள்
- Game-னு சொல்லி GP Muthu கைய ஒடச்சுறாதீங்க 🧐 ஆளாளுக்கு பிரிச்சு மேயுறாங்களே 😱
- FEVER இருந்தாலும் நான் ஆட்டம் போடுவேன்🔥 GP MUTHU Mass மரணம் Dance| BIGG BOSS 6
- மேல T-Shirt, கீழ கோமணத்த கட்டிருவேன் பாத்துகோங்க🤣 Bigg Boss-க்கு எச்சரிக்கை விட்ட GP MUTHU
- Part Time Boyfriend-ஆ😳 Kuraishi As Real Life Veerabagu🤣 Office Days - Comedy Series #shorts
- Bahubali FIGHT😂 NIVAASHINI-க்கு அசராமல் டப் கொடுத்த DHANALAKSHMI | BIGG BOSS 6
- Cute’uh Raveena Daha As A Channel Producer😍 Office Days - Comedy Series #shorts
- GP Muthu-க்கு First Night 1st யார் கூட?😳 Comedy Web Series 🤣 'OFFICE DAYS' Official Trailer🤩
- JANANY மனிதாபிமானம் இல்லாம TORTURE பண்றாங்க 🤣😂 KAMAL யிடம் மாட்டிவிட்ட GP MUTHU
- மனிதாபிமானம் என்று சொல்லமுடியாம திணறிய GP MUTHU 🤣🤣 விழுந்து விழுந்து சிரிச்ச KAMAL
- KAMAL பேச பேச BADAM எடுத்து சாப்பிட்ட GP MUTHU 😂🤣 னோவ் முத்தண்ணா 😂
- "DHANALAKSHMI அப்படியே வெளிய அனுப்பிட போறாங்க" எச்சரித்த KAMAL, SHOCK ஆன HOUSEMATES
- "RACHITHA MARRIAGE, HUSBAND லா அவங்க PERSONAL, அதை பத்தி கேக்காத" ADKக்கு ADVICE பண்ண VJ MAHESHWARI