www.garudabazaar.com

"குயின்சிஐ பார்த்து நானும் Bigg Boss -ம் கத்துக்கலாம்" - புகழ்ந்த கமல்.. இதான் விஷயம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் கடந்த சில தினங்கள் முழுக்க முழுக்க கலவரமாக சென்றது என்று தான் சொல்ல வேண்டும்.

kamalhaasan appreciates queency for her leadership

பொம்மை டாஸ்க் என்ற ஒன்றின் காரணமாக, முழுக்க முழுக்க சண்டைகளும் சச்சரவுகளும் தான் அங்கே அரங்கேறி இருந்தது.

அணியாக பிரிந்து பொம்மை டாஸ்க் ஆடிக் கொண்டிருந்த சமயத்தில், போட்டியாளர் ஷெரின் நெரிசலில் சிக்கி கீழே விழுந்து காயமும் அடைந்ததாக தெரிகிறது.

அப்போதிலிருந்து பிக்பாஸ் வீடு சூடு பிடிக்க ஆரம்பித்திருந்த நிலையில், ஒரு சாரார் தனலட்சுமி தான் ஷெரினாவை தள்ளி விட்டார் என்றும், மற்ற சிலர், தனலட்சுமி அதற்கு காரணமில்லை என்றும் வாதாடி வந்தனர். இப்படியாக கலவர பூமியாக பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்க, பொம்மை டாஸ்க் முடிவடைந்த பின்னர், ஓரளவுக்கு கலகலப்பாகவும் பிக்பாஸ் வீடு மாறி உள்ளது.

kamalhaasan appreciates queency for her leadership

தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றி இருந்த கமல், டாஸ்க் குறித்து நடந்த பல விஷயங்கள் பற்றி போட்டியாளர்களிடம் கலந்துரையாடி இருந்தார். அதிலும் குறிப்பாக, ஷெரினாவை தள்ளி விட்டது தொடர்பாக குறும்படம் போட்டு உண்மையை வெளிப்படுத்தியது சிறப்பம்சமாகவும் அமைந்திருந்தது.

இதனிடையே, போட்டியாளர் ஒருவரை கமல்ஹாசன் பாராட்டியது தொடர்பான விஷயமும் அதிகம் வைரலாகி வருகிறது.

முதல் வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்து கேப்டனாக திகழ்ந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டின் கேப்டன் யார் என்கிற டாஸ்க் கடுமையாக வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட அடுத்த வாரமும் ஜிபி முத்து தன் திறமையை காட்டினார். இந்த நிலையில் தான் கடந்த வாரத்தில் குயின்சி பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

kamalhaasan appreciates queency for her leadership

இந்த ஒருவார காலத்தில் குயின்சி யாரிடம் எந்த பிரச்சினையாக இருந்தாலும் நேரடியாக சென்று பேசுவது, ஒவ்வொரு நாள் இரவும் ஒவ்வொரு பஞ்சாயத்தை முடிப்பது, ஒவ்வொரு ஹவுஸ் மேட்டையும் தனித்தனியாக சந்தித்து அவற்றை பேசி சரி செய்வது, அவர்களின் நிறை குறைகளை சுட்டிக்காட்டி சொல்வது உள்ளிட்ட பணிகளில் செவ்வனே ஈடுபட்டு வந்திருந்தார்.

kamalhaasan appreciates queency for her leadership

இது குறித்து ஹவுஸ் மேட்ஸ் அனைவருமே தற்போது இந்த வார இறுதியில் கமல்ஹாசன் முன்னிலையில் குறிப்பிட்டனர். அதன்படி குயின்சியின் கேப்டன்சியை ஹவுஸ்மேட்ஸ் புகழ, இதை கேட்ட கமல்ஹாசன்,  "அப்படியானால் நானும் பிக் பாஸ்ம் கூட குயின்சியிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது" என தெரிவித்திருந்தார். ரணகளமான பிக்பாஸ் வீட்டிற்கு மத்தியில், கமல்ஹாசனின் பாராட்டுக்களை குயின்சி பெற்றுள்ளது பார்வையாளர்கள் கவனத்தையும் பெற்றுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

kamalhaasan appreciates queency for her leadership

People looking for online information on BB6 Tamil, BiggBoss6 Tamil, Kamal Haasan, Queency will find this news story useful.