’இந்தியன் 2’ ஷூட்டுக்கு தயாரான கையோடு காஜல் போட்ட Mirror செல்ஃபி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்-ஷங்கரின் பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் இவருடன் காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத், பாபி சிம்ஹா என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. லைக்கா நிறுவனம்  தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Indian 2 Kajal Aggarwal selfie Kamal Haasan Shankar

சமீபத்தில் கிடைத்த தகவலின்படி ஒரு பிரம்மாண்ட சண்டைக்காட்சிக்காக கமலுடன் 'ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்' ஹாலிவுட் பட ஸ்டண்ட் குழு இணைந்து பணியாற்றியுள்ளது. மீண்டும் இந்தியன் தாத்தாவாக அவதாரம் எடுக்கும் கமலை பார்க்கவும், இரண்டாம் பாகத்தில் அவர் எதிர்த்துப் போராடவிருக்கும் சமூகப்பிரச்சினையை தெரிந்துகொள்ளவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டுக்கு தயாரான காஜல் அகர்வால் தன் மேக்-அப் கண்ணாடி முன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை பதிவிட்டுள்ளார். முகம் இல்லாத அந்த செல்ஃபியுடன், ’இந்தியன் 2’ ஷூட்டில் பங்கேற்பது மிகவும் உற்சாகம் அளிப்பதாக காஜல் கேப்ஷன் கொடுத்துள்ளார். காஜலில் மெழுகு சிலை கடந்த வாரம் சிங்கப்பூரின் Madame Tussauds அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டது உலக கவனம் பெற்றுள்ளது.

Entertainment sub editor