இந்தியன் 2 ஸ்டார் சிங்கப்பூர் போன காரணம் இதுவா? – ’தென் இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல்…’

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை காஜல் அகர்வால் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த ’கோமாளி’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

Kajal Aggarwal Singapore Madame Tussauds Museum first south indian actress after sridevi Aishwarya Rai

இதைத் தொடர்ந்து கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ’இந்தியன் 2’ படத்தில் அவர் பிசியாக உள்ளார். இதில் இவருடன் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.

இது தவிர கங்கனா ரனாவ்த் நடித்து ஹிந்தியில் வெளியான ’குயின்’ படத்தின் ரீமேக்கான ’பாரிஸ்’, வெங்கட் பிரபுவின் வெப் சீரிஸ் ‘லைவ் டிலிகாஸ்ட்’ என்று பல்வேறு பிராஜக்ட்களில் பிசியாக உள்ளார் காஜல்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற மேடம் துடாட்ஸ் (Madame Tussauds Museum) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளது. காஜல் தனது மெழுகு சிலை ஏற்கெனவே தயாராகி உள்ள நிலையில் நாளை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது மிகுந்த உற்சாகம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த பெருமையை தென் இந்தியாவில் இருந்து பெறும் முதல் நடிகை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor