இது காஜலோட சிலையா இல்ல க்ளோனிங்கா? – 6 வித்தியாசம் சொல்லுங்க பாப்போம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை காஜல் அகர்வால் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த ’கோமாளி’ திரைப்படம் கடந்த ஆகஸ்டு மாதம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

kajal Aggarwal's Indian 2 Kamal Haasan wax statue in Madame Tussauds Museum Live

இதைத் தொடர்ந்து கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ’இந்தியன் 2’ படத்தில் அவர் பிசியாக உள்ளார். இதில் இவருடன் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர். இது தவிர கங்கனா ரனாவ்த் நடித்து ஹிந்தியில் வெளியான ’குயின்’ படத்தின் ரீமேக்கான ’பாரிஸ்’, வெங்கட் பிரபுவின் வெப் சீரிஸ் என்று பல்வேறு பிராஜக்ட்களில் பிசியாக உள்ளார் காஜல்.

இந்நிலையில் சிங்கப்பூரில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற மேடம் துஸாட்ஸ் (Madame Tussauds Museum) அருங்காட்சியகத்தில் தனது மெழுகு சிலையை வைக்கப்பட்டுள்ளது. உலகப்புகழ்பெற்ற சாதனையாளர்களுக்கு இந்த அருங்காட்சியகத்தில் சிலை வைப்பது பெருமையாக கருதப்படும்.

இந்தியாவில் இருந்து காந்தி, அமிதாப் பச்சன், பிரபாஸ், மகேஷ்பாபு ஆகியோருக்கு இங்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு தென் இந்திய நடிகை காஜல் அகர்வாலில் மெழுகு உருவச்சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.

Entertainment sub editor