ஷங்கரின் இந்தியன் 2 : 'சண்ட செய்வோம்' - இது சேனாபதி கமல் சம்பவம் ! Shooting updates இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

kamal shankar's indian 2 shooting details revealed

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான திரைப்படம் இந்தியன். இத்திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. சேனாபதி கதாபாத்திரத்தில் கமல் செய்த அதிரடிக்கு இன்னும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ஷங்கர் - கமல் கூட்டனியில் மீண்டும் உருவாகிறது. நடிகர் சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டு வந்து நிலையில், கமலுக்கு மூட்டில் ஏற்பட்ட பாதிப்பால் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது சர்ஜரி முடித்து கமல் படப்பிடிப்புக்கு தயாராகவுள்ளார். சண்டை காட்சிக்காக 300 ஸ்டன்ட் மேன்களை வைத்து ஒத்திகை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சண்டை காட்சியில் ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைத்த குழு வேலை செய்வதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வரும் பிப்ரவரி 8 முதல் கமல் நடிக்கவிருக்கும் சண்டை காட்சி ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Entertainment sub editor