www.garudabazaar.com

ரஜினி வீட்டில் "ஆன்மிக குரு ரவி ஷங்கர்".. விருந்தளித்து உபசரித்த லதா ரஜினிகாந்த்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth and wife Latha took blessings from Gurudev Ravi Shankar

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "சாதி இழிவை ஒழிக்கும் கருவி காதல்".. உலகநாயகன் கமல்ஹாசன் பரபர ட்வீட்!

'அண்ணாத்த' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சென்னையில் துவங்கியது.

Superstar Rajinikanth and wife Latha took blessings from Gurudev Ravi Shankar

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், ஷிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.

Superstar Rajinikanth and wife Latha took blessings from Gurudev Ravi Shankar

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் ஜெயிலர் படத்தின் குறு முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜெயிலர் படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "லால் சலாம்" படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. லால் சலாம் படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

Superstar Rajinikanth and wife Latha took blessings from Gurudev Ravi Shankar

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு சமீபத்தில் ஆன்மீக குரு குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவி ஷங்கர் சென்றுள்ளார். அங்கு அவரிடம் ரஜினிகாந்த் & லதா ரஜினிகாந்த் ஆசிர்வாதம் பெற்றதாகவும்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  இல்லத்தில் ரவி ஷங்கர் மதிய உணவு உண்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரவி ஷங்கரின் Art of Living நிறுவனம் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படத்தையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் & லதா ரஜினிகாந்த் உடன் ரவி ஷங்கர் இருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

 

Also Read | காதலர் தினத்துக்கு ராஷ்மிகா பகிர்ந்த CUTE வீடியோ.. இப்போ செம்ம ட்ரெண்டிங்!

 

தொடர்புடைய இணைப்புகள்

Superstar Rajinikanth and wife Latha took blessings from Gurudev Ravi Shankar

People looking for online information on Gurudev Ravi Shankar, Latha Rajinikanth, Rajinikanth, Superstar Rajinikanth will find this news story useful.