பிரபல பாலிவுட் ஹீரோவுக்கு ஜோடியான ‘இந்தியன் 2’ நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ரகுல் ப்ரீத் தற்போது புதிய பாலிவுட் திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Kamal Haasan's Indian 2 actress Rakul Preet bags Bollywood movie with Arjun Kapoor

காஷ்வி நாயர் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் நடிக்கும் அவரது 14வது திரைப்படத்தில், அர்ஜுனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து நடிகர் அர்ஜுன் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  “கதை இருக்கு டைட்டில் இல்ல, நடிகர்கள் இருக்காங்க, தேதி இருக்கு, ஷூட்டிங் ஷெடியூல் இருக்கு ஆனா ரிலீஸ் தேதி இல்ல.. ஆனா இதெல்லாம் சீக்கிரம் ஒரு நாள் அறிவிக்கப்படும். என்னுடைய 14வது படம். இந்த அழனான பயணத்தை தொடங்க ஆவலாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இறுதியாக தமிழில், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘என்.ஜி.கே’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதேபோல் தெலுங்கில் நாகார்ஜுனா நடித்த ‘மன்மதுடு 2’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஹிந்தியில் அஜய் தேவ்கனுடன் நடித்த ‘தே தே பியார் தே’ படத்தை தொடர்ந்து சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து நடித்துள்ள ‘மர்ஜாவான்’ திரைப்படம் இன்று ரிலீசாகிறது.

இதனிடையே, தற்போது ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘இந்தியன் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் ரகுல் ப்ரீத் நடித்து வருகிறார்.