விக்ரமின் 58 வது பட பர்ஸ்ட் லுக் இதோ! - டைரக்டர் யார் தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்ரம் தற்போது 'கடாரம் கொண்டான்' படத்தில் நடித்துமுடித்துள்ளார். கமல்ஹாசன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

Vikram And Ajay Gnanamuthu's film first look poster released

அக்ஷரா ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து விக்ரம் 'மகாவீர் கர்ணா' என்கிற பிரம்மாண்ட படத்தில் நடித்துவருகிறார்.

இதனையடுத்து நடிகர் விக்ரமின் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விக்ரமின் 58 வது படமான இதனை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும்  இணைந்து தயாாரிக்கின்றன.

இந்த படத்தை 'டிமான்டி காலனி' , 'இமைக்கா நொடிகள்' ஆகிய இரண்டு படங்களின் மூலம் கவனம் ஈர்த்த அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படவிருக்கிறது.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர்கள் பிற தொழில்நுட்ப கலைஞர்கள் யார், யார் என்கிற விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.