''மூனு மாசமா தம் அடிச்சு, பைக் ஓட்டி.. அப்போ தெரியல.. இப்போ தான் புரியுது''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் பிரபு, மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் அசுரகுரு. இந்த படத்தை ஏ.ராஜ்தீப் இயக்குகிறார். இந்த படத்துக்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார்.

Mahima Nambiar Describe her transformation in Vikram Prabhu's AsuraGuru

இந்த படத்தில் யோகிபாபு , ஜெகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை JSB சதீஷ் தயாரிக்கிறார். இந்நிலையில் மஹிமா நம்பியார் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பைக் ஓட்டுகிறார். வில் பயிற்சி மேற்கொள்கிறார். சிகரெட் புகைக்கிறார். மேலும் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்கிறார். இதுகுறித்து அந்த பதிவில் மஹிமா தெரிவித்துள்ளதாவது, இந்த படத்தில் எனது கதாப்பாத்திரத்தை  கேட்கும் மிக சாதாரணமாக இருந்தது.

ஆனால் சாதாரணப் பெண் போன்று தோற்றம் கொண்ட கேரக்டரை செய்வது அவ்வளவு சுலபம் இல்லை.  பயிற்சி மேற்கொண்ட வீடியோவை உங்களுடன் பகிர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.