சார்ரே கொல மாஸ்..! - சூப்பர் ஸ்டாரின் ‘தர்பார்’ படத்தின் தாறுமாறான மோஷன் போஸ்டர் Video இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.

Super Star Rajinikanth, Ar Murugadoss Darbar Motion Poster

இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தர்பார்’ மோஷன் போஸ்டர் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீம் மியூசிக்குடன் கூடிய தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மோஷன் போஸ்டரை தமிழ் மொழியில் உலக நாயகன் கமல்ஹாசனும், தெலுங்கில் மகேஷ் பாபுவும் மலையாளத்தில் மோகன்லாலும் ஹிந்தியில் சல்மான் கானும் இன்று வெளியிட்டுள்ளனர்.

சார்ரே கொல மாஸ்..! - சூப்பர் ஸ்டாரின் ‘தர்பார்’ படத்தின் தாறுமாறான மோஷன் போஸ்டர் VIDEO இதோ! வீடியோ