கமல் ஹாசனிடம் மனம் திறந்த போட்டியாளர்கள்.. விக்ரமன் கேள்விக்கு கமலின் அட்வைஸ்
முகப்பு > சினிமா செய்திகள்பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.
கடந்த வாரம், பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்தனர். முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.
அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்தது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.
அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ஏடிகேவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். விக்ரமன் மற்றும் கதிரவனின் பெற்றோர்கள், அசிமின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்தனர்.
மேலும் பிக் பாஸ் வீட்டில் வருகை தரும் போட்டியாளர்களின் குடும்பத்தினர், ஹவுஸ்மேட்ஸ் குறித்தும் நிறைய விஷயங்களை பேசி வருகின்றனர். தங்களின் பேவரைட் போட்டியாளர்கள் யார் என்பது குறித்தும், எப்படி அவர்கள் கேம் ஆடுகிறார்கள் என்பது பற்றியும் தங்களது கருத்துக்களை அவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில், வார இறுதி என்பதால் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்று போட்டியாளர்களுடன் உரையாடி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், போட்டியாளர்களிடம் தன்னிடம் ஏதும் கேட்க வேண்டுமென்றால் கேட்கும்படி சொல்கிறார் கமல்ஹாசன். கன்ஃபெஷன் அறைக்கு வரும் போட்டியாளர்கள் தங்களுடைய கேள்விகளை கமலிடம் முன்வைக்கின்றனர். ஷிவின் பேசுகையில்,"நான் ரொம்ப சத்தமா பேசுறேனா சார்?" என்கிறார்.
இதற்கு பதில் அளிக்கும் கமல் ஹாசன்,"ஆமா. நீங்க பேசும்போது நரம்பு புடைக்குது. அதுக்காக நீங்க போலியா பேசுங்கன்னு சொல்லலையே" என்கிறார். அதன்பின்னர் பேசும் விக்ரமன்,"என்னோட இயல்புல தான் நான் இருக்கேன். அம்மா வந்தபோது ஜாலியா இருக்கப்பாருன்னு சொல்லிட்டு போனாங்க" என்கிறார். இதுபற்றி கமல் பேசுகையில்,"உங்க அப்பா ஜாலியா பேசுவாரு இல்லையா? சிரிச்சு கூட்டத்தோட கூட்டமா கலக்கணும். அது ரொம்ப முக்கியம்" என்கிறார்.
இதனையடுத்து கதிரவன் பேசுகிறார். அப்போது,"சண்டை வரவே கூடாதுன்னு யோசிக்கிற ஒரு ஆள் நான்" எனச் சொல்ல அப்போது குறுக்கிடும் கமல் ஹாசன்,"கூடாதுங்குறது தான் எல்லாரோட எண்ணம். ஆனா நடந்துகிட்டு இருக்கே. இருக்க இடத்தை தக்க வச்சுக்கணும் இல்லையா?" என்கிறார் இதனால் இன்றைய எபிசோட் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெருகியுள்ளது.
#Day84 #Promo3 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/9BY0167Z1e
— Vijay Television (@vijaytelevision) January 1, 2023
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Kamal Haasan Says He Is Proud About Vikraman Father Talking
- ADK Acts Like Kathiravan Kamal Haasan Laughs Loud
- Shivin In Tears After No One In Her Family Visited BB House
- Shivin And Amudhu Throw Pillow To Vikraman During Sleeping
- Myna Nandhini Say Vikraman In Finals Azeem Questions
- Vikraman Asks Myna About Her Prediction About Final In Biggboss
- Vikraman Will Be In Biggboss Final Says Kathir And Listed Reasons
- Azeem Questions About How Vikraman Enter Finale To Adk
- Kathiravan Mother About Shivin And Appreciate Her
- Shivin Explanation To Vikraman Request To Amudhvaanan Bigg Boss 6
- Myna Nandhini Talks About Vikraman Future Wife In BB House
- Vikraman Azeem And Amudhavanan Speech In New Task Bigg Boss
தொடர்புடைய இணைப்புகள்
- அழுதுட்டே வெளிய போன SHIVIN 😢 KATHIR GIRLFRIEND வந்தது தான் காரணமா?
- AZEEM மாதிரி பேசி அசத்திட்டாரு😂... Bigg Boss வீட்டை சிதறவிட்ட Amudhavanan மகன்
- Bigg Boss Task, எங்களுக்கே வெறுப்பா இருக்கும் 😟டேய் எங்க இருந்து டா வாரீங்க? - Janany
- "Azeem நீ நடிகனே இல்ல 😡 மன்னிப்பு கேட்கணும்" - Devipriya Reveals Real Shooting Spot Secrets
- "Azeem, Vikraman பத்தி பேச முடியாது 😡 மூஞ்சி காட்டி, முறைச்சு, Vengeance வெச்சு" 🔥Ayesha Interview
- Bigg Boss-லிருந்து வீடு திரும்பிய Ram Ramasamy... மலர் தூவி கொண்டாடி தீர்த்த குடும்பத்தினர்
- "நீங்க போட்ட அந்த பிச்சை தான் நான் இன்னைக்கு இங்க இருக்கேன்"... Housemates முன்னே கண்கலங்கிய KAMAL
- "இத யார்ட்டயும் சொல்லமாட்டேனு சத்தியம் பண்ணு"... Kathir பற்றி Dhana-விடம் பேசிய Shivin
- BP அதிகமாகி மயக்கம் போட்டு தரையில் விழுந்த Azeem... செய்வதறியாமல் பதறிப்போன Housemates
- குற்றவாளி கூண்டில் VIKRAMAN 😱 விடாமல் துரத்தும் JANANY 💥 தோலுரிக்கும் Fatman BB Review
- 🔴Live: Vikraman-ஐ எதிர்த்து வாதாடிய Azeem, செம Fire-U 🔥 யாரு சரி? தோலுரிக்கும் Fatman
- "Vikraman FINAL போவாரு... Azeem எதிர்த்து பேசினாலே… வாய மூடு, நீ பொண்ணு" - VJ Maheswari BB Interview