www.garudabazaar.com

கேமரா மேனை பார்த்தாலே ROLEX கேங்ல ஒருத்தர் மாதிரி இருப்பாரு 🤣.. 'விக்ரம்' DOP பற்றி கமல் பேச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸானது.

Vikram Kamal Haasan about DOP Girish Gangadharan

Also Read | "நிஜமான காடு இது".. சூரி வெளியிட்ட மிரட்டலான விடுதலை பட ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோ!

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.  அனிருத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரித்தது.

இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்தனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

Vikram Kamal Haasan about DOP Girish Gangadharan

இதற்காக கமல்ஹாசன், சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது. தற்போது இந்த சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்து உள்ளது.

இந்த படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்'ரக காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். அதேபோல் உதவி இயக்குனர்களுக்கு இருசக்கர வாகனங்களை பரிசளித்தார் தயாரிப்பாளர் கமல்ஹாசன்.

Vikram Kamal Haasan about DOP Girish Gangadharan

இந்த படத்தின் ஓடிடி மற்றும் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் ஏற்கனவே வெளியாகி உள்ளது. கடந்த தீபாவளிக்கு விக்ரம் திரைப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

ராஜ் கமல் நிறுவனம் விக்ரம் படத்தின் 100 வது நாள் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது.  விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா கடந்த நவம்பர் 7-ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் விக்ரம் படத்தில் பங்களிப்பாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், வினியோகஸ்தர்கள். தியேட்டர் உரிமையாளர்கள் உள்பட அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவில் கமல்ஹாசன் பேசும் வீடியோ காட்சிகள் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் பிரத்யேகமாக வெளியாகி உள்ளன.

Vikram Kamal Haasan about DOP Girish Gangadharan

இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் & படக்குழுவினர் குறித்து சில விடயங்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக, "இந்த படம் வெற்றி பெற நானும் இயக்குனரும் பல கதைகளை பேசினோம். அவர் ஒரு கதை சொன்னார், நான் ஒரு கதை சொன்னேன். லோகேஷ் கனகராஜூக்கு இந்த படத்தின் மீது இருந்த ஈடுபாடு வெற்றியை நோக்கி மட்டுமே இருந்த இலக்கு தவறாத குறி எனக்கு பிடித்திருந்தது. இவர் வழிக்கு விட்டால் நமக்கு வெற்றிப் படம் கொடுப்பார் என்று நம்பினேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. எனக்கு பாயின்ட் ஆஃப் கான்டாக்ட் இவர் ஒருத்தர் தான். எனக்கு எடிட்டர் யாருனு தெரியாது. கேமரா மேனை பார்த்தாலே ரோலக்ஸ் கேங்ல ஒருத்தர் மாதிரி இருப்பார். இவரும் படத்தில் வேஷம் பண்ணலாமேனு கேட்டுருக்கேன் நான். இந்த வெற்றியை நாங்கள் எதிர் பார்க்கவில்லை. நீங்கள் கிரீடத்தையும் செங்கோலையும் கொடுத்து விட்டீர்கள்." என கமல் பேசினார்

Also Read | வாரிசு படத்தின் அம்மா பாடல்.. ரிலீஸ் எப்போ? புதிய போஸ்டருடன் வெளியான அப்டேட்!

கேமரா மேனை பார்த்தாலே ROLEX கேங்ல ஒருத்தர் மாதிரி இருப்பாரு 🤣.. 'விக்ரம்' DOP பற்றி கமல் பேச்சு! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Kamal Haasan about DOP Girish Gangadharan

People looking for online information on Girish Gangadharan, Kamal Haasan, Lokesh Kanagaraj, Vikram will find this news story useful.