www.garudabazaar.com

மகளுக்கு விலையுயர்ந்த பரிசளித்த கமல்.. சந்தோசத்தில் நெகிழ்ச்சியான அக்சரா! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக கதாநாயகனாக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன்.

Kamal Haasan Gift to Daughter Akshara Haasan

Also Read | "நிறையா பட்டாசு வாங்கி வைங்க".. துணிவு படத்தின் DOP பகிர்ந்த வைரல் ட்வீட்! TRENDING

கமல்ஹாசன் நடிகராக மட்டுமல்லாது 'மக்கள் நீதி மய்யம்' என்ற தேர்தல் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார்.

மேலும் சினிமா சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளிலும் கமல்ஹாசன் அவ்வப்போது பங்கெடுத்தும் வருகிறார்.

Kamal Haasan Gift to Daughter Akshara Haasan

கலாச்சாரம், காந்தியம், சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட களங்களில் நடக்கும் மாநாடு கருத்தரங்குகளில் அவ்வப்போது கமல்ஹாசன் கலந்து கொண்டு வருகிறார்.

மகாத்மா காந்தியாரின் மிகத்தீவிர பின்பற்றாளரான உலகநாயகன் கமல்ஹாசன், கதர் ஆடைகளை அணிந்து கதர் ஆடை குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தி வருபவர்.

Kamal Haasan Gift to Daughter Akshara Haasan

கடந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கதருக்காக புது நிறுவனம் ஒன்றைத் துவக்கி இருப்பதாகக் கூறி அதன் பெயரையும், லோகோவையும் அறிமுகப்படுத்தி இருந்தார். KH - House of Khaddar என ஒரு நிறுவனத்தையும்  கமல்ஹாசன் நடத்தி வருகிறார்.

தற்போது விக்ரம் படத்தினை தொடர்ந்து கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.

Kamal Haasan Gift to Daughter Akshara Haasan

இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் .

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

Kamal Haasan Gift to Daughter Akshara Haasan

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி உள்ளது.

இந்தியன் 2 படத்தினை தொடர்ந்து கமல், மணிரத்னம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்சரா ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கிறிஸ்துமஸ் பரிசாக கமல்ஹாசன் அளித்த ஆப்பிள் நிறுவனத்தின் ஏர் பாட்ஸ்ஸை UnBoxing செய்து ரசிகர்களுக்கு காண்பிக்கிறார். இந்த ஏர்பாட்ஸின் மதிப்பு சுமார் 600 அமெரிக்க டாலர்கள் ஆகும்.

Also Read | CHRISTMAS & NEW YEAR கொண்டாட நடிகை மீனா எந்த நாட்டுக்கு போயிருக்காங்கனு பாருங்க! வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Gift to Daughter Akshara Haasan

People looking for online information on Akshara Haasan, Kamal Haasan, Kamal Haasan Gift to Daughter, Ulaga Nayagan Kamal Haasan will find this news story useful.