ஜெயம் ரவி - காஜல் அகர்வாலுடன் 'பிக்பாஸ்' சாண்டி போடும் ஆட்டம் - கோமாளி மேக்கிங் வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 12, 2019 04:59 PM
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து, ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'கோமாளி'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்த படத்தை புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் இருந்து பாடல்கள் விதம் வீடியோவாக Behindwoods TVயில் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் பாடல்களுக்கு பிரபல நடன இயக்குநர் சாண்டி, ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வாலுக்கு நடனம் சொல்லிக் கொடுக்கிறார். சாண்டி தற்போது பிக்பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவி - காஜல் அகர்வாலுடன் 'பிக்பாஸ்' சாண்டி போடும் ஆட்டம் - கோமாளி மேக்கிங் வீடியோ வீடியோ
Tags : Jayam Ravi, Kajal Aggarwal, Comali, Sandy