Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு.. மாஸ் லுக்கில் களமிறங்கிய கமல்ஹாசன்! சூப்பர் BTS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியன் 2 படத்தின் கமல்ஹாசனின் படப்பிடிப்பு புகைப்படம் வெளியாகி உள்ளது.

Kamal Haasan Indian 2 Movie Shooting BTS Images

Also Read | கையில வீர் ரஜினிகாந்த்.. பின்னாடி தந்தை ரஜினிகாந்த்.. சௌந்தர்யாவின் வைரல் ஃபோட்டோ!!

கடந்த 1996-ஆம் ஆண்டு ஷங்கா் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த   படம் இந்தியன். ஏ.‌எம். ரத்னம் தயாரிப்பில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் இந்தியன்.

இந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள உள்ளார்.

Kamal Haasan Indian 2 Movie Shooting BTS Images

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சிலநாட்களுக்கு முன் துவங்கியது. இதற்கான பிரத்யேக பூஜை சென்னையில் நடந்தது.‌

Kamal Haasan Indian 2 Movie Shooting BTS Images

இதில் இயக்குனர் ஷங்கர், கலை இயக்குனர் முத்து ராஜ், நடிகர்கள் ஜெய் பிரகாஷ், பாபி சிம்ஹா, லைக்கா நிறுவன அதிகாரி தமிழ் குமரன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் செண்பக மூர்த்தி, ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் இன்றுமுதல் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இயக்குனர் ஷங்கருடன் முறுக்கு மீசையுடன் கமல்ஹாசன் காட்சியளிக்கிறார்.

Also Read | அஜித்தின் BLOCKBUSTER பட தலைப்பில் கதிர் & திவ்ய பாரதி.. ரொமான்ஸ் ததும்பும் FIRST LOOK POSTER!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Indian 2 Movie Shooting BTS Images

People looking for online information on Indian 2, Indian 2 Movie Shooting Updates, Kamal Haasan will find this news story useful.