Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

Siva Sivaayam : சிவ பக்தராக செல்வராகவன் உருகி பாடும் பகாசூரன் படத்தின் முதல் பாடல் Trending!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் இணைந்து  நடிக்கும் திரைப்படம் பகாசூரன்.

selvaraghavan starring Bakasuran first single Siva Sivaayam is out

Also Read | Kate Winslet : ஷூட்டிங்கில் காயம்.! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நம்ம ‘டைட்டானிக்’ ரோஸ்..?

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின்  இயக்குனர் மோகன்.G, அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா  ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

selvaraghavan starring Bakasuran first single Siva Sivaayam is out

சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ரா தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்தின் மூலம் இயக்குனர் மோகன் G யுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.  சமீபத்தில்தான் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் & இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது. படத்தின் டீஸரும் ஏற்கனவே வெளியாகியது.

முன்னதாக இப்படம் குறித்து இயக்குநர் மோகன்.ஜி பேசும்போது, “பகாசூரன் உருவான விதம் பற்றி இயக்குனர் மோகன்.ஜி பேசும்போது,  “வடமாவட்ட வாழ்வியலை மையமாக கொண்ட கதைகளைதான் இதுவரை நான் இயக்கி வந்துள்ளேன். இந்தப்படத்தின் கதைக் களமும் அப்படிதான் அமைந்துள்ளது.  கடலூர், சேலம், ஏற்காடு, திருச்சி ஆகிய இடங்களிலேயே ‘பகாசுரன்’ கதை நகர்கிறது.  படத்தில் வரும் கதாபாத்திரங்கள்  மகாபாரத கதாபாத்திரங்களுடன்  தொடர்புள்ளதாக  இருக்கும்.” என்று கூறி இருந்தார். 

selvaraghavan starring Bakasuran first single Siva Sivaayam is out

‘பீஸ்ட்’,  ‘சாணிக்காகிதம்’ படங்களில் நடிகராக கவனம் ஈர்த்த பிரபல இயக்குநர் செல்வராகவன், இப்படத்தில் கட்டைக்கூத்து கலைஞனாக வருகிறார். இந்நிலையில்தான் இப்படத்தின் என்கிற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.  பாபநாசம் சிவனின் ஒரு பாடல், இப்படத்தில் முக்கிய அம்சமாக இருக்கும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில் பாபநாசம் சிவன் எழுதிய பாடலுடன் இணைந்த திருவாசக பாடலால இப்பாடல் உருவாகியுள்ளது. கோவிலில் நின்று செல்வராகவன் பாடுவதாக அமைந்துள்ள இந்த பாடல் வைரலாகி வருகிறது.

selvaraghavan starring Bakasuran first single Siva Sivaayam is out

இந்த படத்தை நவம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றியுள்ளார்.

Also Read | Senthamaraiye : என்னா ரொமான்ஸ்.!!. பிக்பாஸ் அமீர் & பாவனி முதல்முறை சேர்ந்து நடித்த ஆல்பம்..!!

selvaraghavan starring Bakasuran first single Siva Sivaayam is out

People looking for online information on Bakasuran, Selvaraghavan Bakasuran first single, Siva Sivaayam will find this news story useful.