www.garudabazaar.com

Indian 2 : 'பொன்னியின் செல்வன்' ஆடியோ & டிரெய்லர் விழாவில் ‘இந்தியன் 2 அப்டேட்’ சொன்ன ஷங்கர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, முன்னணி இயக்குனரான மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இதன் முதல் பாகமான 'பொன்னியின் செல்வன் - பாகம் 1', செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

shankar reveals Indian 2 update Ponniyin selvan Audio Launch

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம், ரஹ்மான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர்கள் ஷங்கர், மிஷ்கின், நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் என ஏராளமான திரை பிரபலங்கள், பொன்னியின் செல்வன் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் குறித்து இயக்குனர் ஷங்கர் பேசுகையில்,  “என்ன ஒரு துடிப்பான இசை. நம்மை அப்படியே பொன்னியின் செல்வன் உலகத்திற்கே ஏ.ஆர். ரஹ்மான் அழைத்து சென்று விட்டார். இப்போதுதான் பான் இந்தியா, பான் இந்தியா என பேசுகிறார்கள். ஆனால் முதல் பான் இந்தியன் இயக்குனர் மணி சார் தான். அவருடைய இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசை சேரும் போது அடுத்த லெவலுக்கு போகிறது. தளபதி படத்தில் வரும் பாடல்கள் மற்றும் படமாக்கிய விதம் எல்லாம் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். ரசிகர்கள் மாதிரி நானும் பொன்னியின் செல்வன் பார்க்க ஒரு ரசிகனாக காத்துக் கொண்டிருக்கிறேன். ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்யும் படங்கள் அனைத்தும் ஹிட் ஆகிறது. படத்தின் Casting அப்படி இருக்கிறது. இத்தனை பேர் இருப்பது ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சுபாஸ்கரன் சாருக்கு வாழ்த்துக்கள்” என ஷங்கர் பேசினார்.

தொடர்ந்து, இந்தியன் 2 திரைப்படம் குறித்து பேசிய இயக்குனர் ஷங்கர், “இந்தியன் 2 படத்தின் Schedule நேற்று (செப்டம்பர் 5-ஆம் தேதொ) முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்த மாத (செப்டம்பர்) கடைசியில் ஆரம்பமாகிறது” என குறிப்பிட்டார்.

shankar reveals Indian 2 update Ponniyin selvan Audio Launch

People looking for online information on Indian 2, Kamal Haasan, Lyca Productions, Ponniyin Selvan, Ponniyin Selvan Audio and Trailer Launch, Ponniyin Selvan Audio Launch, Ponniyin Selvan part 1, Shankar will find this news story useful.