Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

புது கெட்-அப்பில் உலகநாயகன்.. கமலை சந்தித்த பிரபல நடிகர் & இயக்குனர்! வைரல் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசனை பிரபல நடிகர் & இயக்குனர் சந்தித்துள்ளார்.

Kamal Haasan New Look with Parthiban Image went viral

Also Read | குழந்தையின் போட்டோவை முதல்முறையாக வெளியிட்ட சோனம் கபூர்.. பையன் பேரு இது தானாம்! வைரல் PHOTO!

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். 

இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்தனர்.

நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதற்காக கமல்ஹாசன், சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார்.

உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது. இதுவரை வெளியான தமிழ் படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது.

Kamal Haasan New Look with Parthiban Image went viral

படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்'ரக காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். அதேபோல் உதவி இயக்குனர்களுக்கு இருசக்கர வாகனங்களை பரிசளித்தார் தயாரிப்பாளர் கமல்ஹாசன்.

விக்ரம் படத்தை அடுத்து கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார்.இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள உள்ளார்.

கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.

Kamal Haasan New Look with Parthiban Image went viral

இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சிலநாட்களுக்கு முன் துவங்கி உள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசனை பிரபல நடிகர் இயக்குனர் பார்த்திபன் சந்தித்துள்ள புகைப்படத்தை பார்த்திபன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ஒரு நாளை இனிதாக்க ஒரு துளிக் காதல் போதுமானது.

அக்காதல் ஒருவர் மீதொருவர் வைப்பதாக மட்டுமல்லாமல்,ஒரு மையப் புள்ளியின் மீது இரு பார்வைகள் வைக்கும் காதலாகக் கூட இருக்கலாம். அம்மையத்தின் பெயர் சினிமா.

Kamal Haasan New Look with Parthiban Image went viral

பெயரை குறிப்பிடாமல்’என் சினிமாவுக்கு…

சினேகமுடன்’என எழுதி தி.ஜா வின் ‘சிலிர்ப்பு’ வழங்கினேன்.’இரவின் நிழலை’ பாராட்டிவிட்டு, விக்ரம், இந்தியன்,k.b, நாகேஷ்,சோ’வென பெய்யும் மழையாக அவர் பேச…நனைந்தேன்.இதுவே நற்செய்தி இதனினும் ‘நற்…  நாளையே வரலாம், நாளை மறுநாளும் வரலாம்.வந்ததை வரவில் குந்தவை-ப்போம்.வருமென்ற நம்பிக்கை வைப்போம்.ஆங்…‘பொன்னியின் செல்வன்’பற்றியும் பேசினோம்.நேற்று மாலை வருத்தத்தை இன்றைய மகிழ்ச்சி கடத்திவிடுமென நேற்றே நம்பிவிட, Live the moment!" என பார்த்திபன் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் தாடி இல்லாமல் முறுக்கு மீசையுடன் புதிய லுக்கில் காட்சியளிக்கிறார் ‌

Also Read | பிரபல OTT-யில் ரிலீஸாகும் சூப்பர் ஹிட் 'திருச்சிற்றம்பலம்'.. எப்போ? எதுல? முழு தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan New Look with Parthiban Image went viral

People looking for online information on Kamal Haasan, Kamal Haasan New Look, Parthiban, R parthiban will find this news story useful.