Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

இந்தியன் 2 படத்திற்காக களமிறங்கிய காஜல்.. வைரலாகும் குதிரை சவாரி வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.

Kajal aggarwal learns horse riding for indian 2 movie

Also Read | Kate Winslet : ஷூட்டிங்கில் காயம்.! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நம்ம ‘டைட்டானிக்’ ரோஸ்..?

அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, ராம்சரண், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் காஜல் அகர்வால்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2020 ஆம் ஆண்டு, தொழிலதிபர் கெளதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால்.

இதன் பின்னர், கடந்த ஏப்ரல் மாதத்தில், காஜல் - கெளதம் தம்பதியருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. மேலும் தங்களின் குழந்தைக்கு 'நெய்ல்' என அவர்கள் பெயரிட்டனர். தங்களின் திருமணம் மற்றும் குழந்தை பிறந்ததற்கு பிறகு, அடிக்கடி தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் பகிர்ந்து வந்தார்.

Kajal aggarwal learns horse riding for indian 2 movie

இதற்கு மத்தியில், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள இந்தியன் 2 படத்திலும் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி உள்ளார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைக்கும் இந்தியன் 2 படத்தில், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளதாக.அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் ஆரம்பமாகி இருந்தது. இந்நிலையில், இந்தியன் 2 படத்திற்காக குதிரை ஏற்றம் கற்றுக் கொள்வது தொடர்பான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

Kajal aggarwal learns horse riding for indian 2 movie

மேலும், இந்த பதிவின் கேப்ஷனில், "பிரசவத்திற்கு பின், நான்கு மாதங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு தற்போது படப்பிடிப்பு தளத்துக்கு திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்குவதைப் போன்று உணர்கிறேன். என் உடல் முன்பு இருந்ததைப் போன்று இல்லை. குழந்தை பிறப்புக்கு முன்பு என்னால் நீண்ட நேரம் உடலுழைப்பை செலுத்த முடிந்தது. குழந்தைப் பிறப்புக்கு பிறகு அதே ஆற்றலுடன் பணிபுரிவது கடினமானது. தனியாக குதிரை ஓட்டுவது பெரிய சவாலாக உள்ளது.

தற்காப்புக் கலை பயிற்சியை ஆரம்பம் முதலே எடுத்து வந்தது தற்போது உதவுகிறது. நமது உடல் மாறலாம். ஆனால் தடுக்க முடியாத உறுதித்தன்மையும் இலக்கும் மாற வேண்டியதில்லை. நாம் நாள்தோறும் நம்மை நிரூபிப்பதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைப் பொறுத்தது தான் அது. எந்த முடிவாக இருந்தாலும் தயக்கம் கொள்ளத் தேவையில்லை.

Kajal aggarwal learns horse riding for indian 2 movie

இந்தியன் 2 படத்தில் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி. இந்த வேலையில் புதிதாக திறன்களை கற்றுக் கொண்ட எனக்கு, பின்னாளில் அது பொழுது போக்காகவும் மாறியது. சினிமா துறையில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இதனை என்னுடைய வீடு என்று தான் அழைக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

 

Also Read | AK61 படத்தின் FIRST LOOK போஸ்டருடன் வெளியான மாஸ் டைட்டில்..நடிகர் அஜித்தோட லுக் தீய்யா இருக்கு!

தொடர்புடைய இணைப்புகள்

Kajal aggarwal learns horse riding for indian 2 movie

People looking for online information on Indian 2, Indian 2 Movie, Kajal Aggarwal, Kajal aggarwal learns horse riding will find this news story useful.