www.garudabazaar.com

BIGG BOSS சீசன் - 6.. கமல்ஹாசன் தோன்றும் புதிய டீசர் வீடியோ! கமல் பேசுற "பஞ்ச்" தான் ஹைலைட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

BIGG BOSS season 6 Kamal Haasan Teaser Video vijay tv

Also Read | 'பொன்னியின் செல்வன்' படத்திற்காக கமல்ஹாசனுடன் களமிறங்கிய 3 முன்னணி நடிகர்கள்! இது வேறலெவல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதியில் அந்த வாரம் வெளியேறப் போவது யார் என்கிற அறிவிப்பை நடிகர் கமலஹாசனே அறிவிப்பார். மேலும் போட்டியாளர்கள் செய்த செயல்களை விமர்சிப்பார். வாராவாரம் ஒரு சிறப்பு தகவலையும், சிறந்த புத்தகங்களையும் ரசிகர்களுக்கு கமல்ஹாசன் பரிந்துரைப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

BIGG BOSS season 6 Kamal Haasan Teaser Video vijay tv

அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சுமார் 100 நாட்கள் வரை இருக்கும் நிலையில், அவர்களுக்கு ஏராளமான போட்டிகள்  வழங்கப்படும்.

இப்படி அனைத்து சவால்களையும் கடந்து, கடைசி வரை இருக்கும் நபர்களில் ஒருவர், வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முன்னதாக, அந்த வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

BIGG BOSS season 6 Kamal Haasan Teaser Video vijay tv

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்பொழுதும் தமிழில் ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடைபெறும். கடந்த இரண்டு சீசன் மட்டும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை நடைபெற்றது.  முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜூ ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வென்றனர்.

சமீபத்தில் முடிந்த ஐந்தாவது சீசனும் கடந்த 4வது சீசனை போல் கடந்த அக்டோபர் மாதம் தான் தொடங்கியது. இந்நிலையில் 6வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முன்னோட்ட வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

BIGG BOSS season 6 Kamal Haasan Teaser Video vijay tv

இந்நிலையில் கமல்ஹாசன் தோன்றும் புதிய டீசர் வீடியோ வெளியாகி உள்ளது. இருள் சூழ்ந்த நிலையில் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையும் கமல்ஹாசன், வானத்தையும் கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு "வேட்டைக்கு ரெடியா?" என கேட்பது போல் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.

பொதுவாக, தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் தான் பெரும்பாலும் கலந்து கொள்வார்கள். முதல் முறையாக பொது மக்களும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | Soppana sundari: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'சொப்பன சுந்தரி'.. வெளியானது வேறலெவல் டைட்டில் லுக்.!

BIGG BOSS சீசன் - 6.. கமல்ஹாசன் தோன்றும் புதிய டீசர் வீடியோ! கமல் பேசுற "பஞ்ச்" தான் ஹைலைட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

BIGG BOSS season 6 Kamal Haasan Teaser Video vijay tv

People looking for online information on Bigg boss, BIGG BOSS season 6, Bigg Boss Tamil 6, Kamal Haasan, Vijay tv will find this news story useful.