வனிதா தூண்டிவிட்டதன் காரணமாக முகேனிடம் கோபப்பட்டேனா ? - நெகிழும் அபிராமி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 21, 2019 06:17 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் தன்னைத் தானே துன்புறுத்தியதன் காரணமாக மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.

அவர் வெளியேறியதற்கு என்ன காரணம் என முழுமையான காரணம் கூறவில்லை. டாஸ்க்கிற்கு பிறகு நடந்த வாக்குவாதம் காரணமாக அவர் அப்படி செய்துகொண்டதாக பிக்பாஸ் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ஷன் மூலம் அபிராமி வெளியேறினார். இந்நிலையில் முகேன் விவகாரம், மதுமிதா வெளியேற்றப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது அதுவரை மென்மையாக முகேன் விவகாரத்தை அனுகிய அபிராமி, வனிதா தூண்டிவிட்டதன் காரணமாகவே ஆக்ரோஷமாக மாறினாரா என தொகுப்பாளர் தாரா கேட்டார். அதற்கு பதிலளித்த அபிராமி, கமல் எபிசோடிற்கு பிறகு முகேன் ஏன் எனக்கு ஆதரவாக பேசவில்லை என்று எனக்கு தோன்றியது.
பிறகு வனிதா உள்ளே வந்து வெளியே மக்கள் உன்னை பற்றி வேறுவிதமாக நினைக்கிறார்கள் என்று சொல்லும் போது அவன் எனக்கு நம்பிக்கை கொடுக்கவில்லை அப்படி சொல்லாதீர்கள் என்று தெரிவித்தேன். ஆனாலும் திரும்ப திரும்ப அப்படி பேசிக்கொண்டிருந்தார்கள். வனிதாக்காவும் உன்னை பற்றி மக்கள் அப்படி நினைக்கிறார்கள் என்று சொல்லவும் ஏற்பட்ட விரக்தியினால் அப்படி நடந்து கொண்டேன் என்றார்.